சீதைக்கு வால் இல்லையே!
இராமர், இராவணனைப் போரில் வென்று, இலங்கை அரசனாக வீபிஷனுக்கு முடிசூட்டினார்.
இந்த விழா முடிந்ததும், சீதை, இலட்சுமணன் ஆகியோருடன் தனக்கு உதவி செய்த வானரங்களையும் அழைத்துக் கொண்டு இலங்கையை விட்டு புஷ்பக விமானத்தில் புறப்பட்டார்.
விமானம் கிஷ்கிந்தையை அடைந்தது. முதலில் விமானத்திலிருந்து இராமன் கீழே இறங்கினார்.
கிஷ்கிந்தைப் பெண் குரங்குகள் அங்கு ஓடோடி வந்தன. விமானத்தில் தாவி ஏறின.
அந்தப் பெண் குரங்குகளுக்குத் தங்கள் கணவரான வானரங்களைப் பார்க்கும் முன்பு சீதையைப் பார்க்க வேண்டுமென்று ஆவல்.
“அப்படி என்ன பேரழகி அவள்? அவளை மீட்பதற்காக இத்தனை பெரிய போர்?” எனும் சிந்தனையுடன் சீதையைப் பார்த்தன.
சீதையைச் சுற்றிச்சுற்றி வந்த பெண் குரங்குகள் தங்களுக்குள் பேசிக் கொண்டன.
“இவளா பிரமாதமான அழகு...! இவளுக்கு நம்மிடமிருக்கும் ஒரு வால் கூட இல்லையே...”
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.