கடவுளை நிரூபிக்க முடியுமா?
ஜென் துறவி ஒருவரிடம் அவரது சீடர் ஒருவர் கடவுளைப் பற்றிய விவாதத்தில் இறங்கினார்.
“விவாதத்தால், வாய் வார்த்தைகளால் கடவுளை நிரூபிப்பது கடினம்” என்றார் குரு.
“ஏன் அப்படி?” என்று வினவினார் சீடர்.
“அது நிழல் என்றால் என்ன என்று, ஒரு குருடனுக்கு விளக்க முயற்சி செய்வது போன்ற செயல்” என்றார் குரு.
சீடர் புரியாமல் விழித்தார்.
“குருடன் வெளிச்சத்தையே பார்த்திராதவன் அல்லவா? எனவே அவனுக்கு ஒளி என்றால் என்னவென்றே தெரியாது. அப்படியிருக்கும் நிலையில் ஒளி உருவாக்கும் நிழல்களைப் பற்றி அவனுக்கு எப்படி விளக்குவது? கடவுளின் படைப்பையே வார்த்தைகளால் விளக்கி விவரித்து விட முடியாது என்றால், அதைப் படைத்த கடவுளை எப்படி விவாதத்தால், வார்த்தைகளால் அறிய முடியும்?” என்று விளக்கினார் அந்தத் துறவி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.