பூச்சியில் ஆண், பெண் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?
ஓரு நாள் முல்லா நசுருதீன் பூச்சி பிடித்துக் கொணடிருந்தான்.
அவன் சிலவற்றைப் பிடித்தான்.
பிறகு தன் மனைவியிடம், “நான் இரண்டு ஆண் பூச்சிகளையும் இரண்டு பெண் பூச்சிகளையும் பிடித்தேன்” என்றான்.
அவன் மனைவி, “அதிசயமாக உள்ளதே, இந்தப் பூச்சிகளை ஆண்,பெண் என எப்படிப் பிரித்துக் கண்டுபிடித்தீர்கள்?”என கேட்டாள்.
அதற்கு அவன், “இரண்டு கண்ணாடியின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தன. இரண்டு செய்தித் தாள் மீது உட்காந்து கொண்டிருந்தன” என்றான்.
- ஓஹோவின் “ரகசியமாய் ஓரு ரகசியம்” நூல்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.