ஒரு முறை நடைபாதையில் உரிமம் இல்லாமல் நடை பாதையில் வியாபாரம் செய்ததற்காக முல்லா மாட்டிக் கொண்டார்.
அவர் அந்த ஊருக்குப் புதிது, அதனால் அங்கு நடைபாதையில் வியாபாரம் செய்ய உரிமம் தேவை என்பதே அவருக்குத் தெரியாது.
அவர் நீதி மன்றத்திற்க்கு அழைத்து வரப்பட்டார். அங்கு நீதிபதி முன் மூன்று பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உரிமம் இல்லாமல் விபச்சாரம் செய்ததால் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர். அந்த ஊரில் விபசாரம் செய்யவும் உரிமம் வழங்கப்படுகிறது. அவர்கள் அத்தகைய உரிமம் இல்லாததால் மாட்டிக் கொண்டனர்.
நீதிபதி முதல் பெண்ணிடம் கேட்டார், “நீ யார், என்ன செய்து கொண்டிருந்தாய்? இந்தக் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா?”
முதல் பெண், “நான் ஒரு மாடல் அழகி, என்னைத் தவறாக கைது செய்துவிட்டனர்” என்று பொய் சொன்னாள்.
இதைக் கேட்ட நீதிபதி, அவளுக்கு முப்பது நாட்கள் கடும் காவல் தண்டனை விதித்தார்.
அடுத்து, நீதிபதி அங்கிருந்த இரண்டாம் பெண்ணைப் பார்த்து, அதே கேள்விகளைக் கேட்டார்.
இரண்டாம் பெண், “நான் ஒரு நடிகை! எனக்கும் விபச்சாரத்துக்கும் சிறிதும் தொடர்பில்லை” என்று பொய் சொன்னாள்.
நீதிபதி, அவளுக்கு அறுபது நாட்கள் கடும் காவல் தண்டனை அளித்தார்.
பின்னர் அவர் மூன்றாவது பெண்ணிடமும் மற்ற இரு பெண்களிடம் கேட்ட அதே கேள்விகளைக் கேட்டார்.
மூன்றாம் பெண், “ஐயா ! நான் ஒரு விபச்சாரி, எனக்கு இந்தத் தொழிலுக்கு உரிமம் எடுக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரியாது, எனக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது!” என்றாள்.
இதைக் கேட்ட நீதிபதி, “நான் உன்னைப் பாராட்டுகிறேன், தண்டனை கிடைக்கும் எனத் தெரிந்தும் உண்மையைச் சொன்ன உன்னைப் பாராட்டுகிறேன். உன்னை விடுதலை செய்வதுடன் உனக்கு உரிமம் வழங்கவும் உத்திரவிடுகிறேன்!” என்றார்.
இப்போது முல்லாவின் முறை, நீதிபதி தனது வழக்கமான கேள்விகளையே முல்லாவிடமும் கேட்டார்.
அதற்கு முல்லா, “ஐயா! நானும் ஒரு விபச்சாரி , எனக்கும் உரிமம் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது!” என்றார்.
நீதிபதி திகைத்துப் போய் அவரைப் பார்த்தார்.