யார் இங்கே புனிதர்?
அந்தப் பகுதி முழுவதும் அந்தப் புனிதரின் பெயர் பரவிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில் வசிக்கிற செய்தியும் கூடவே பிரபலமாக இருந்தது. தூரத்துக் கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச் சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடுநாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம் அடைந்தார்.
குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைலைக்கரன் வரவேற்றான்.
கிராமத்து மனிதர் வேலைக்காரனிடம், நான் அந்த மகானைப் பார்க்க வேண்டுமென்றார்.
குடிசைக்குள் அவருக்கு நல்ல விருந்து கொடுக்கப்பட்டது. அப்போதும் புனிதரைப் பார்க்க முடியவில்லை. நேரம் கடந்து கொண்டே இருந்தது.
பொறுமையிழந்த கிராமத்து மனிதர், “நான் எப்பொழுதுதான் புனிதரைப் பார்க்க முடியும்” என்று கேட்டார்.
“நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்” என்று சொன்னான் அந்த வேலைக்காரன்.
மேலும், “நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண கீழ்நிலை மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளையும் மிகச் சுலபமக தீர்த்துவிடலாம்” என்று சொன்னான் அந்த வேலைக்காரன்.
கிராமத்து மனிதருக்குப் புரிந்தது புனிதர் யாரென்று...!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.