இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

ஆயிரமாயிரமாகக் கொட்டி...

முருகன் கண்ணுச்சாமி வீட்டில் அனைத்துக் கணக்குகளையும் பார்த்து அவரது நிர்வாகியாக வேலை செய்து வந்தான்.

கண்ணுச்சாமியின் வீட்டில் அவன் எந்த வேலையாக இருந்தாலும் செய்தான். அந்த வேலை அவனுடையதாக இல்லாவிட்டாலும் கூட தன் முதலாளியின் பெயரில் அவன் வைத்திருந்த நம்பிக்கையில் அந்த வேலையை முடித்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தில் இழுத்துப் போட்டு செய்வான்.

அவனுடைய உழைப்பில் முதலாளி முன்னுக்கு வந்து கொண்டிருந்தார். முதலாளியும் முருகனின் வேலையால் தான் முன்பிருந்ததை விட மிகவும் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டிருந்ததை நினைத்து மகிழ்ந்திருந்தார். கண்ணுச்சாமியின் முன்னேற்றத்திற்கு முருகனின் உழைப்பும், அறிவும்தான் காரணம் என்று ஊரிலிருக்கும் பலரும் பேசத் துவங்கினர்.

இந்நிலையில் முருகனை அழைத்தார். "என்னிடம் நிறைய பேர் வேலை பார்த்தாலும் என்னுடைய நம்பிக்கைக்குரிய ஆளாக நீ மட்டுமே இருக்கிறாய். இனி நான் செய்யும் வேலை அனைத்தையும் நீயே பார்க்க வேண்டும். உனக்கு முதலாளி போன்ற அந்தஸ்து அளிக்கிறேன்." என்றார்.

தன் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாரே என்று முருகனும் மகிழ்ச்சி அடைந்தான். நேரம் பார்க்காமல் மேலும் கூடுதலாக பல வேலைகளைத் தேடித் தேடிச் செய்யத் துவங்கினான். முருகன் தனது குடும்பத்தைப் பற்றியோ தனது வீட்டைப் பற்றியோ நினக்காமல் கண்ணுச்சாமியின் முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான்.



கண்ணுச்சாமியின் வேலைகளை முருகனே பார்த்துக் கொண்டதால் கண்ணுச்சாமியின் கவனம் வேறு பக்கம் திரும்பியது. தன் உதவிக்கு வைத்திருந்த சிலருடன் சேர்ந்து தவறான பாதையில் செல்லத் துவங்கினார். அவர்களின் சொல்படி தனது பாதையை மாற்றிக் கொண்டு நடக்கத் துவங்கினார்.

அவர்களும் "முதலாளி நீங்க இவ்வளவு முன்னேறியதற்கு முருகன் தான் காரணம் என்று இந்த ஊரில் இருக்கும் பலரும் சொல்கிறார்கள். இது உங்களுக்கு நல்லதில்லை. உங்களைப் பற்றிப் பேசாமல் உங்களிடம் வேலை பார்க்கும் முருகனைச் சொல்கிறார்களே. அவனை வேலையை விட்டு எப்படியாவது நிறுத்தி விடுங்கள். அப்போதுதான் இந்த சொத்துக்களை நீங்க சம்பாதித்தது என்பார்கள். மேலும் உங்கள் சொத்தை அவனுடைய சொத்து என்று சொல்வதற்கு முன்பு அவனை வேலையை விட்டு அனுப்பி விடுங்கள்" என்று கண்ணுச்சாமியிடம் தூபம் போட்டு விட்டனர்.

கண்ணுச்சாமி நிறைய படித்தவராக இருந்தாலும் உண்மையை உணரும் தன்மை அவரிடம் இல்லை. தன்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணம் என்று இந்த ஊரே சொல்லிக் கொண்டிருக்கும் முருகனை வேலையை விட்டு நிறுத்தி விட வேண்டுமென்று முடிவு செய்தார். முருகனைத் தான் வேலையை விட்டு அனுப்பி விட்டால் ஊரில் அவனுக்கு மேலும் நல்ல பெயர் கிடைத்து விடும், தனக்கும் கெட்ட பெயராகி விடும் என்பதால் முருகனே வேலையை விட்டுப் போகும்படி செய்ய வேண்டுமென்று முடிவு செய்தார்.

மறுநாள் தனது உதவியாளராய் இருந்தவர்களுக்கு முருகனைக் காட்டிலும் அதிகமான சம்பளம் அளிக்கத் துவங்கினார்.

முருகன் தன் முதலாளியிடம் சென்று," அய்யா, உங்கள் வேலை அனைத்தையும் நான் பார்க்கிறேன். எனக்கு அதற்கு தனியாக சம்பளம் எதுவும் வழங்கவில்லை. மேலும், பத்து வருடங்களுக்கு மேலாக வேலை செய்து வரும் எனக்கு குறைவான சம்பள உயர்வும் வேலை எதுவும் செய்யாமல் உங்களுடன் இருக்கும் சிலருக்கு மட்டும் என்னைக் காட்டிலும் அதிக சம்பளம் தருகிறீர்களே? அதுவும் அவர்கள் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் கூட ஆகவில்லையே..."என்று கேட்டான்.

"அவங்க காலையிலிருந்து இரவு வரை என்னுடன் இருக்கிறார்கள். என்னுடனேயே இருக்கும் அவர்களுக்கு நான் இன்னும் அதிகமாகக் கூட சம்பளம் தருவேன். அதையெல்லாம் நீ கேட்கக் கூடாது. போ... போ..." என்று விரட்டினார்.



தனது சொந்த வேலையெல்லாம் தவிர்த்து விட்டு முதலாளியின் முன்னேற்றத்திற்காக மட்டுமே பாடுபட்ட தன்னை இப்படி அவமானப்படுத்தி விட்டதை நினைத்தபடியே வீட்டிற்குச் சென்ற முருகனுக்கு அன்றிரவு முழுக்க தூக்கமே வரவில்லை.

மறுநாள் முதலாளியைச் சந்தித்துத் தான் வேலையை விட்டு நின்று விடப் போவதாகச் சொன்னான்.

அதைப்பற்றி அவர் சிறிது கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. முருகனும் அந்த வேலையை விட்டு நின்று விட்டான்.

ஊரிலிருப்பவர்கள் கண்ணுச்சாமியிடம் முருகன் வேலையை விட்டுப் போய் விட்டது குறித்துக் கேட்ட போது, "நான் அவனுக்கு முதலாளி அந்தஸ்து கொடுத்திருந்தேன். அப்படியிருந்தும் அவனாகவேப் போயிட்டான்." என்று சொன்னார்.

முருகனும் தன்னுடைய உழைப்பு பத்து வருடங்கள் ஒரு முட்டாள் முன்னேற்றத்திற்காக வீணாகப் போய் விட்டதே என்று வருத்தப்பட்டு அந்த ஊரிலேயே இருக்கப் பிடிக்காமல் வெளியூருக்குச் சென்று விட்டான்.

முருகன் பார்த்து வந்த வேலைகளைப் பார்க்கத் தகுதியான ஆட்கள் இல்லாததாலும் உதவியாளர்களாக இருந்தவர்கள் காட்டிய வழியில் எல்லாம் கண்ணுச்சாமி சென்றதாலும் கண்ணுச்சாமி தனது சொத்துக்களைப் பராமரிக்க முடியாமல் ஒவ்வொரு சொத்தாக, அனைத்தையும் இழந்து தெருவிற்கே வந்து விட்டார்.

"துவக்கத்திலிருந்து நம் மேல் நம்பிக்கையுடனும் அனைத்து வேலையையும் ஆர்வத்துடனும் செய்யும் முருகனை ஊக்கப்படுத்தாமல் விரட்டி விட்டேனே... அடுத்தவர் பேச்சைக் கேட்டு அவமானப்படுத்தி அனுப்பி விட்டேனே... அதனால்தான் என்னுடைய நிலை இப்படி மோசமாகப் போய்விட்டது" என்று கண்ணுச்சாமி இன்றும் பலரிடம் ஊருக்குள் புலம்பிக்கிட்டுத் திரிகிறாராம்.

"தகுதியானவர்களை ஆயிரமாயிரமாகக் கொட்டிக் கொடுத்தாவது நம்மை விட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுபோல் தரமில்லாதவர்களை ஆயிரமாயிரமாகக் கொட்டிக் கொடுத்தாவது ஒதுக்கி விட வேண்டும்" என்பது தெரியாமல் பல கண்ணுச்சாமிகள் தங்களையும் இழந்து, தங்கள் சொத்துக்களையும் இழந்து பைத்தியங்களாய்த் திரிவதை உங்கள் ஊரிலும் பார்க்கலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p37.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License