இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

கொடூரமான பூனை

முன்னொரு காலத்தில் உழவன் ஒருவன் பூனை ஒன்றை வளர்த்து வந்தான். கிழடாகிப் போன அந்தப் பூனையால் எலிகளைப் பிடிக்க முடியவில்லை.

இந்தப் பூனையால் எந்தப் பயனும் இல்லை. இதைக் காட்டில் விட்டு விடுவோம் என்று நினைத்தான் அவன்.

அப்படியே அதைக் காட்டில் விட்டுவிட்டு வந்தான்.

அங்கே உலவிக் கொண்டிருந்தது பூனை. பெண் நரி ஒன்று அதைப் பார்த்தது.

"ஐயா! தாங்கள் யார்? இப்பொழுது தான் தங்களை முதன் முறையாகப் பார்க்கிறேன்" என்று கேட்டது அது.

"நான் பூனை பிரபு" என்று கம்பீரமாகச் சொன்னது பூனை.

அதன் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கியது நரி. "ஐயா! என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். உண்மையுள்ள மனைவியாக நான் நடந்து கொள்வேன். உங்கள் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பேன்" என்றது.

பூனையும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது. இரண்டிற்கும் திருமணம் நடந்தது.

தான் சொன்னபடியே நடந்தது நரி. தனியே சென்று கோழிக் குஞ்சுகளைப் பிடித்து வரும், பூனைக்கு உண்ணக் கொடுக்கும். சில சமயம் அது பட்டினியாகவே கிடக்கும்.

ஒரு நாள் உணவு தேடச் சென்றது நரி. வழியில் அதை முயல் ஒன்று சந்தித்தது.

"நண்பனே! உன் வீட்டிற்கு நான் வரலாம் என்று இருக்கிறேன். எப்பொழுது வருவது?" என்று கேட்டது முயல்.

"என் வீட்டிற்கு வரும் எண்ணத்தை விட்டுவிடு. அங்கே பூனை பிரபு இருக்கிறார். அவர் கொடூரமானவர். உன்னைக் கண்டால் ஒரு நொடியில் கொன்று தின்று விடுவார்" என்றது நரி.

அங்கிருந்து ஓடிய முயல் வழியில் ஓநாயைச் சந்தித்தது. "உனக்குச் செய்தி தெரியுமா? நரியின் வீட்டில் பூனை பிரபு இருக்கிறாராம். அவர் மிகக் கொடூரமானவராம். யாரையும் கொன்று தின்று விடுவாராம்" என்றது அது.

இந்த விந்தையான செய்தியைப் பன்றியிடம் சொன்னது ஓநாய். பன்றி இதைக் கரடியிடம் சொன்னது.

முயல், ஓநாய், பன்றி, கரடி நான்கும் ஒன்றாகக் கூடின.

"எப்படியாவது பூனை பிரபுவை நாம் பார்க்க வேண்டுமே?" என்றது கரடி.

"உயிரின் மீது உனக்கு ஆசை இல்லையா?" என்று கேட்டது முயல்.

"எனக்கு நல்ல வழி ஒன்று தோன்றுகிறது நாம் நால்வரும் சேர்ந்து பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்வோம். பூனை பிரபுவையும் நரியையும் விருந்திற்கு அழைப்போம்" என்றது ஓநாய்.

எல்லோரும் இதற்கு ஒப்புக் கொண்டனர்.

மேசையின் மேல் விதவிதமான உணவுப் பொருள்கள் பரிமாறப்பட்டன.

"யார் சென்று பூனை பிரபுவை அழைப்பது?" என்ற சிக்கல் எழுந்தது.

"எனக்கு தூங்கி வழிகின்ற முகம். நான் சென்று எப்படி அழைப்பேன்?" என்று மறுத்தது பன்றி.

"எனக்கு அதிக வயதாகி விட்டது. உடல் நலமும் சரியில்லை" என்றது ஓநாய்.

"ஏதேனும் ஆபத்து என்றால் என்னால் வேகமாக ஓட முடியாது" என்றது கரடி.

மூன்றும் முயலைப் பார்த்து, "விருந்துச் செய்தியை நீதான் சொல்லிவர வேண்டும்" என்றன.

முயல் நடுங்கிக் கொண்டே நரியின் வீட்டை அடைந்தது. நீண்ட நேரம் வெளியிலேயே காத்திருந்தது.

வெளியே வந்த நரி முயலைப் பார்த்து வியப்பு அடைந்தது.

"பன்றி, ஓநாய், கரடி மூன்றும் என்னை இங்கே அனுப்பின. நாங்கள் நால்வரும் சேர்ந்து தங்களுக்கும் பூனை பிரபுவிற்கும் சேர்த்து விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். உங்களுக்காகவே இந்த விருந்து. நீங்களும் பூனை பிரபுவும் இந்த விருந்தில் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்" என்றது முயல்.

"நல்லது. நான் விருந்திற்கு வருகிறேன். பூனை பிரபுவும் என்னுடன் வருவார். நாங்கள் வரும் போது நீங்கள் நால்வரும் எங்காவது ஒளிந்து கொள்ளுங்கள். பூனை பிரபு, உங்களைப் பார்த்தால் நீங்கள் செத்தீர்கள். விருந்து எங்கே நடக்கிறது?" என்று கேட்டது நரி.

இடத்தைச் சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தது முயல். தன் நண்பர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னது.

பயந்து போன நான்கும் என்ன செய்வது என்று சிந்தித்தன.

"நான் அந்த மரத்தில் ஏறிக் கொள்கிறேன்" என்றது கரடி.

"அந்தப் புதரில் நான் ஒளிந்து கொள்கிறேன்" என்றது ஓநாய்.

"உன் அருகிலேயே நானும் பதுங்கிக் கொள்கிறேன்" என்றது முயல்.

"அடர்ந்த அந்த மரங்களுக்குப் பின்னால் நான் மறைந்து கொள்கிறேன்" என்றது பன்றி.

பூனை பிரபுவும் நரியும் வரும் ஓசை கேட்டது. நான்கும் பதுங்கிக் கொண்டன.

பலவிதமான உணவுப் பொருள்களைப் பார்த்தது பூனை. அதற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. "மியாவ், மியாவ்" என்று கத்திக் கொண்டே சாப்பிடத் தொடங்கியது.

புதரில் இருந்த ஓநாய், "எவ்வளவு பயங்கரமான விலங்கு? என்ன கொடூரமான குரல்? சாப்பிடும் வேகத்தைப் பார்த்தால் நம் விருந்து அதற்குப் போதாது. நம்மையும் கொன்று தின்னும் போல இருக்கிறது" என்றது.

"ஆமாம்" என்று நடுங்கிக் கொண்டே சொன்னது முயல்.

மரத்தில் இருந்த கரடியும் மறைந்து இருந்த பன்றியும் நடுங்கின.

பூனை விருந்தை வயிறார உண்டது. மேடையின் மேல் படுத்துத் தூங்கத் தொடங்கியது.



மரத்தின் மறைவில் பதுங்கி இருந்த பன்றியின் வாலைக் கொசு ஒன்று கடித்தது. உடனே பன்றி தன் வாலை அசைத்தது.

சத்தம் கேட்டு விழித்தது பூனை. பன்றியின் வாலை எலி என்று தவறாக நினைத்தது அது.

"மாட்டிக் கொண்டாயா?" என்று கத்திக் கொண்டே எலியைப் பிடிக்கப் பாய்ந்தது. நேராகப் பன்றியின் முகத்தில் போய் மோதியது அது.

எதிர்பாராமல் நடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது பன்றி. அங்கிருந்து "தப்பித்தேன்" என்று கத்திக் கொண்டே ஓட்டம் பிடித்தது.

பன்றியைக் கண்டு பயந்த பூனை ஒரே பாய்ச்சலில் அருகில் இருந்த மரத்தில் ஏறியது.

அங்கிருந்த கரடி தன்னைத்தான் பூனை பிரபு கொல்ல வருகிறார் என்று பயந்தது. விரைந்து மரத்தின் உச்சிக் கிளைக்குச் சென்றது. அதன் எடை தாங்காமல் கிளை முறிந்தது. புதரில் மறைந்திருந்த ஓநாயின் மேல் விருந்தது அது.

அலறி அடித்துக் கொண்டு ஓநாயும் ஓட்டம் பிடித்தது.

முயலும் அதைத் தொடர்ந்து ஓடியது.

வலியைத் தாங்கிக் கொண்டு "தப்பித்தோம் பிழைத்தோம்" என்று கரடியும் ஓடியது.

நீண்ட நேரத்திற்குப் பிறகு நான்கும் சந்தித்தன.

"பூனை பிரபு பார்ப்பதற்குச் சிறியவராக இருக்கிறார். நம் நால்வரையும் கொன்று தின்றிருப்பார். நல்ல வேளை தப்பித்தோம்" என்றது கரடி.

மற்ற மூன்றும் "ஆமாம்" என்றன.

இப்படி தற்செயலாக நடக்கும் சில செயல்கள் சிறியதைக் கூட பெரியதாக்கிக் காண்பிக்கின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p373.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License