ஞானி ஒருவர் பாலைவனத்தில் நடந்து கொண்டிருந்தார்.
எதிரில் வந்த வயதான ஒரு பெண்மணி திடீரென அவர் காலில் விழுந்து அழுதார்.
அந்தப் பெண் ஞானியிடம்,''என்னிடம் மிக அன்பாக இருந்த என் கணவர் இறந்து விட்டார். என் உறவினர்கள் என்னை ஏமாற்றி என் சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர். கடவுள் மிகக் குரூரமானவர். எனக்கு அபார ஞாபக சக்தியைக் கொடுத்து பழையதை எல்லாம் நினைத்துத் துக்கம் நெஞ்சை அடைக்கச் செய்கிறார்,''என்று கூறி அழுதார்.
அதைக் கேட்ட அந்த ஞானி வாய்விட்டுச் சிரித்தார்.
அந்தப் பெண்ணிடம் அவர் சொன்னார்,
''கடவுள் எனக்கும் அதிக ஞாபக சக்தியைக் கொடுத்துள்ளார். வறண்ட பாலைவனத்தில் நடக்கும் போது நான் ரசித்த ரோஜாக்களை நினைவுக்குக் கொண்டு வந்து மகிழ்ச்சியாக இருக்க செய்கிறார். முகம் சுளிக்கும் மனிதர்களைக் காணும் போது முன்னர் புன்னகையோடு பார்த்த மனிதர்களை நினைவூட்டுகிறார். அதனால் எனக்கு அவர் கருணை வடிவானவராகத் தெரிகிறார்.''
அந்தப் பெண்ணுக்கு ஞானி சொன்னது புரிந்தது.
எதையும் நாம் நோக்கும் விதத்தில்தான் வாழ்க்கை சுகமானதா? இல்லை துக்கமானதா? என்று தீர்மானிக்கப்படுகிறது.