குடிப்பழக்கத்தை விட ஒரு வழி?
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.
"சுவாமி, நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள்...'' என்று கேட்டான்.
அதற்கு ஞானி, "நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்'' என்றார்.
மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான்.
அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். அவர் தூணைப் பார்த்து, "ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார்.
உடனே குடிகாரன், "ஐயா, நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்...'' என்றான்.
உடனே ஞானி சிரித்துக் கொண்டே, "நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடிப்பழக்கத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயும் அதை விட்டுவிடு'' என்றார்.
நாம் தான் பல விசயங்களைப் விடாமல் பிடித்துக் கொண்டு அவதிப்படுகிறோம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.