திருடன் செய்த தானம்!
ஓர் ஏழை, காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார். வெயில் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அவர் ஓய்வெடுப்பதற்காக அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு திருடன் அவரிடம் இருந்த பொருட்களையும் துணிகளையும் பறித்துக் கொண்டு விரட்டினான்.
அவர் வெயிலில் மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றார்.
அதைப் பார்த்த திருடனின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. கிழிந்துபோன செருப்பு மற்றும் ஒரு பழைய குடையை கொடுத்தான்.
பின் அவன் தன் வழியே அவனிடத்துக்குத் திரும்பிய போது, வழியில் ஒரு புலி அவனைத் அடித்து கொன்றது.
அப்போது எமதூதர்கள் அந்தத் திருடனின் உயிரைக் கொண்டுபோக வந்தார்கள்.
அதே சமயம் அங்கு வந்த விஷ்ணு தூதர்கள் எம தூதர்களைத் தடுத்து, “இந்தத் திருடன் வைகாசி மாதத்தில் செருப்பு, குடை தானம் செய்திருக்கிறான். அதனால் அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு விலகி விட்டன. எனவே அவனை நாங்கள் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்கிறோம்” என்று கூறி அந்த திருடனின் உயிரை வைகுண்டத்துக்குக் கொண்டு சென்றனர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.