இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

மகா விஷ்ணு மடியிலமர்ந்த துருவன்

முன்னொரு காலத்தில் வாழ்ந்த மனு சக்கரவர்த்தியின் பேரனும், உத்தானபாதனின் மகனுமான துருவன், அவனுடைய தந்தை போருக்கு சென்று வெற்றியோடு திரும்பி வருகிறார் என கேள்விப்பட்டு, அவருக்கு வாழ்த்துச் சொல்லத் தாயை அழைக்கிறான்.

ஆனால் அவனது தாயான சூநிதியோ “நான் மகாராணியாக இருந்தபோதும், உன் சிற்றன்னைக்குத்தான் முதல் உரிமையை உன்னுடைய தந்தை வழங்கி இருக்கிறார். ஆகவே நீயும் செல்லாதே” என்கிறாள்.

அவனோ தந்தையைப் பார்ப்பது என் கடமை என சொல்லி செல்கின்றான். அவனுடைய தந்தையின் மடியில் அமர்ந்திருந்த துருவனைக் கண்ட அவனுடைய சிற்றன்னையோ, என் மகனுக்குத்தான் முதல் உரிமை உனக்கு முதலுரிமை வேண்டுமானால் நீ என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும் எனக்கூறி, அவனைக் கீழே தள்ளி அவமானப்படுத்தி விடுகிறாள். நீ வணங்கும் மகாவிஷ்ணுவிடம் அடுத்த முறையாவது என் வயிற்றில் பிறக்க வேண்டும் என கேள் என்கிறாள்.

சிற்றன்னையின் கொடும் செயலுக்கு விடையளிக்க யாரும் இல்லாததால், தன் தாயிடம் இதுபற்றி கேட்டான். அவன் தாயான சூநிதி, பகவான் விஷ்ணுவின் மகிமையை உணர்ந்தவள் என்பதால், துருவனிடம் “மகனே இந்த காரியங்களுக்குப் பகவான் விஷ்ணு ஒருவரே பதிலளிக்க வல்லவர். நீ நினைத்தால் அவருடைய மடியிலேயே அமரலாம்” என்கிறாள்.

தன் தாயின் வார்த்தைகள் மனதில் பதியவே துருவன் பகவான் மகாவிஷ்ணுவை நேரில் பார்க்கும் ஆவல் மேலோங்க, தன் தந்தை, தாய், அரச போகங்கள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, பகவானைத் தேடிப் புறப்பட்டான்.

அப்படி புறப்பட்ட துருவனின் பயணத்தில் அவன் அணிந்திருந்த அணிகலன்களைத் வழித்திருடர்கள் அபகரிக்க விளைகின்றனர். மகாவிஷ்ணு தனக்கு காட்சியளிக்க வேண்டும் என நினைப்பதனால், துருவனைத் தன் மகனாகக் கருதிய லட்சுமி தேவி வைகுண்டத்தில் இருந்து நேரில் அவனுக்குக் காட்சி அளித்து, அவனைக் காப்பாற்றுகிறார்.

லட்சுமி தேவி துருவனிடம், “உன்னுடைய சிறு வயதில் நீ விரதங்கள் மேற்கொண்டு பகவானைத் தரிசிக்க இயலாது என அவனுக்கு அறிவுரை கூறுகின்றாள். ஆனால் அவனுடைய உயரிய குறிக்கோள் மகாவிஷ்ணு மட்டும்தான் என புரிந்து கொண்ட லட்சுமி தேவி வைராக்கியத்திற்கு இது சமயமல்ல எனச் சொன்னாள்.

அவனோ, “தாயே என்னை மன்னியுங்கள். நான் என் விஷ்ணுவைத் தரிசிக்க என்ன இன்னல் வந்தாலும், அதற்குத் தடையாக உள்ள அனைத்துக் காரியங்களையும் மேற்கொண்டு அவரைத் தரிசிப்பேன்” என்றான்.

அரண்மனையில் துருவனுடைய தாய் சூநிதி மகனைக் காணாமல் கணவன் உத்தானபாதனிடம் சென்று மன்றாடுகிறாள். ராஜாவாகிய நீங்கள் என்னுடைய மகனைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என தன்னுடைய கணவனிடம் முறையிடுகிறாள்.

ராஜாவாகிய உத்தானபாதன் ஒரு படையை அனுப்பித் தேடச் சொல்வதாக சொல்கின்றார். அங்கே அவர்கள் இருவரின் உரையாடலையும் கேட்டுக் கொண்டிருந்த துருவனின் தாத்தா மனு சக்கரவர்த்திக்குக் கோபத்துடன் உத்தானபாதனிடம், “உன் மகன் காணாமல் போனால் நீதான் சென்று தேட வேண்டும். உன் கண்கள் ஆசையின் காரணமாகக் குருடாகி விட்டது. உலக இச்சையின் மறு உருவங்கள் உன் மனதை ஆட்கொண்டதால், நீ உன் மகனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும்” என்று அறிவுரை கூறி அனுப்புகிறார்.

தகப்பனார் உத்தானபாதன் தன்னைத் தேடிக் காட்டிற்கு வருவதைக் கண்டான் துருவன். தகப்பனின் அன்பால் தன் பயணம் தடைபடும் என உணர்ந்தவன், தந்தையைக் காணாமல் ஒளிந்து கொண்டு பகவானை மட்டும் மனதில் இருத்தியவனாய் முன்னேறிச் சென்றான். வழியில் தென்பட்டவர்கள் தன்னைத் திரும்பிச்செல் எனக் கூறிய வார்த்தைகளை கேட்காமல், பகவான் ஒன்றே குறிக்கோளாக எண்ணி திடமான மன உறுதியுடன், தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் சென்றான்.

வழியில் நாரதர் அவனின் ஆன்ம தாகம் தீர்க்க வழி சொல்வதாகக் கூறி, அவனைத் ‘திரும்பிச்சென்று விடு’ என்ற போதும், தன் மனதிலுள்ள திடமான குறிக்கோளை எடுத்துரைத்து, விஷ்ணுவைக் காண வழி சொல்லுமாறு மன்றாடிக் கேட்டான்.

துருவனின் உறுதியான மனதைத் தெரிந்து கொண்ட நாரதர், “பகவான் விஷ்ணுவைக் காண வேண்டுமானால் அநேக இன்னல்களைச் சந்திக்க வேண்டும். நீயோ சிறுவன் உன்னால் முடியுமா?” என வினவினார். துருவன் சிறுவனாக இருந்தபோதும், தன் தந்தையும், சிற்றன்னையும் அவனிடம் நடந்துகொண்ட விதம், அவன் ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டபடியால், நாரதர் கேட்ட கேள்விக்கு “என்ன இன்னல்கள் வந்தபோதும், நான் பகவான் விஷ்ணுவைத் தரிசிப்பதற்காக எதையும் தாங்கிக் கொள்வேன்” என உறுதியாகக் கூறினான். இறைவனைக் காண நம் கண்முன் உள்ள நம் தேவைகளே தடையாக இருப்பதை உணர்ந்த நாரதர், “முதலில் உன் உணவை விட்டுவிடு” என்றார். துருவனின் மனம் விஷ்ணுவைக் காண கொண்டுள்ள ஆவலில் நாரதர் கூறியபடியே செய்கின்றான். பின்னர் “தண்ணீர் குடிப்பதையும் விட்டுவிடு” என கூறினார். அதற்கும் சிறிதும் அஞ்சாமல், தன்னிடம் உள்ள தண்ணீரைத் தரையில் ஊற்றிவிட்டுப் பகவானின் நாமத்தை உச்சரித்துக் கடும் தவம் புரிகிறான். உணவையும், தண்ணீரையும் மறந்து பகவான் விஷ்ணுவையே தியானிக்கையில், அந்த பரம்பொருள் துருவனின் இருதயத்திற்குள் வந்ததை உணர்ந்து சந்தோஷம் மேலோங்க நாரதரிடம், “எனக்குள் இறைவன் இருப்பதை உணர்கிறேன்! ஆனால் அவர் என் முன்பு ஏன் பிரத்தியட்சமாக காட்சி கொடுக்கவில்லை?” என வருத்தம் நிறைந்த குரலில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.



துருவனின் ஜீவாத்மாவில் அந்த பரமாத்மா உறைவிடம் கொண்டபின், துருவனுக்குள் முழு சிருஷ்டியும் அடங்கி விட்டது. இதை உணர்ந்த நாரதர், “உன் மூச்சை ஓம் என்ற சத்துவத்துடன் உள் இழுத்து அப்படியே நிறுத்திவிடு” என்றுரைத்தார்.

தன் உடலை வென்ற பாலகன் தற்போது நாரதரின் சொற்படி தன் உயிரையும் துறக்க விரதம் பூண்டு, நாரதர் கூறிய வண்ணம் மூச்சை நிறுத்திக் கொண்டான். அந்தக் கணத்தில் சிருஷ்டி முழுவதும் இயங்காமல் ஸ்தம்பித்து விட்டது. இப்போது துருவனின் ஆசையை நிறைவேற்ற தேவர்கள் அனைவரும் ஏகமனதாக பகவான் விஷ்ணுவிடம் விண்ணப்பித்தனர். பகவானும் துருவனின் உயிரைக் காப்பாற்ற அவன் முன்பு தோன்றினார்.

அப்படியே அவனிடம், “நீ என்னைக் கண்டதும் உன்னுடைய கடமை முடிவுறவில்லை. இந்தப் பிறவியில் நீ பெற்றோருக்குச் செய்ய வேண்டிய உன்னுடைய கடமையைச் செய். எந்தப் பிள்ளையும் பெற்றோரின் மடியில் இருந்து இறங்கக் கூடாது. மேலும் என்னைப் பார்க்க இப்படி பசியாக இருந்து தவம் இருக்கக் கூடாது. நீ இந்தக் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றிய பின்னர் உன்னை இத்தரணியில் அனைவரும் மறக்காமல் இருப்பதற்காக நீ வானுலகில் துருவ நட்சத்திரமாக ஒளி வீசிக் கொண்டிருப்பாய்” என அறிவுரை வழங்கினார்.

இந்தப் பூவுலகத்தில் நீ ஒரே இறைவனின் கொள்கையைப் பின்பற்றி எனக்கு சேவை செய்வாய். இவ்வாறு தர்மம், கர்மம், வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றித் தெளிவாக அவனுக்கு விளக்கிக் கூறினார்.

அப்போது லட்சுமி தேவியும் அவனுக்குக் காட்சி தருகின்றார்.

துருவன் அவரிடம், “தாயே தாங்கள் முன்பே பகவான் விஷ்ணுவைத் தரிசிக்கும்படி செய்திருக்கலாம். ஏன் காலதாமதம் செய்தீர்கள்?” என கேட்டான்.



“நான் உதவி செய்திருந்தால் இன்று நீ அடைந்த முழுமையை அடைந்திருக்க முடியாது. நீ விஷ்ணுவுக்கு சிறந்த பக்தனாகி விட்டாய். அவரை அடைவதற்கு யாராவது உதவி செய்தால் மகத்துவம் அவர்களைச் சார்ந்திருக்கும். நீ சிரத்தையுடன் மேற்கொண்ட தவத்தின் வலிமையால் அவரை அடைவதற்கான வழியைத் தெரிந்துகொண்டாய் எனக்கூறி துருவனுக்கு லட்சுமி தேவி ஆசி வழங்கினார்.

இறுதியாக நாரதரும் அவனுக்குக் காட்சி அளிக்கிறார். துருவன் அவரைத் தன் மானசீகக் குருவாக ஏற்று தவம் புரிந்து வெற்றி பெற்றதற்கு, வழி சொன்னதற்கு நன்றி சொன்னான்.

நாரதரும், விஷ்ணுவும், லட்சுமி தேவியும் துருவனைக் காட்டில் இருந்து அவனுடைய தந்தையின் அரண்மனை வரைக்கும் கொண்டு வந்து விட்டுச் சென்றனர்.

அரண்மனையில், துருவனின் தந்தையோ அவனின் சிற்றன்னையை வெறுத்து, அவனுக்காக மகாவிஷ்ணுவிடம் தன் தவறை நினைத்து, வருந்தி வேண்டிக் கொண்டிருக்கிறார். துருவன் முதலாவதாகத் தன் சிற்றன்னையைக் கண்டு, அவள் செய்த உதவிக்கு நன்றி செலுத்தச் சென்றான்.

அவனது சிற்றன்னையோ அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். அவனோ, உங்களால்தான் மகாவிஷ்ணுவைச் சந்திக்க நேர்ந்தது என கூறி மகிழ்ச்சி அடைந்தான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p394.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License