இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

எங்கே குறை இருக்கிறது?

மிகச் சிறந்த ஓவியர் அவர். அவரிடம் பல ஊர்களிலிருந்தும் மாணவர்கள் வந்து ஓவியப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு இளைஞன் தன் பயிற்சியை நிறைவு செய்தவுடன், ஆசிரியரான ஓவியரிடம் விடைபெற்றுக் கிளம்பிச் சென்றான்.

தான் கற்றுக் கொண்ட ஓவியத்திறன் குறித்து சுய மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. அவன் தான் கற்றுக் கொண்டதைப் பயன்படுத்தி, நான்கு நாட்களில் ஒரு அழகிய ஓவியத்தை வரைந்தான். இந்த ஓவியம் சிறப்பாக இருக்கிறதா என்பது குறித்து, பிறரின் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. எனவே தனது ஓவியத்தை எடுத்துச் சென்று அந்த ஊரின் சந்தையின் மையப் பகுதியில் அனைவரின் பார்வையிலும் படும்படி வைத்திட முடிவு செய்தான்.

அந்த ஓவியத்தை ஒரு இடத்தில் மாட்டி, அதனருகில், “சிறப்பு பெற்ற ஓவியரிடம் ஓவியக்கலை குறித்து நல்ல பயிற்சி பெற்று வந்திருக்கிறேன். நான் கற்றுக்கொண்ட ஓவியக் கலை குறித்து எனக்கு ஒரு சுய மதிப்பீடு தேவைப்படுகிறது. இந்த ஓவியத்தில் தவறுகள் ஏதேனும் இருக்கலாம். அப்படி எங்காவது தவறு காணப்பட்டால் அந்த இடத்தில் தவறுக்கான ‘X’ குறியீட்டை இட வேண்டுகிறேன்” என்று எழுதி ஒரு பேனாவையும் அதில் கட்டி தொங்க விட்டுச் சென்றான். ஓவியம் குறித்த கருத்தை எழுதுவதற்காக ஒரு நோட்டையும் கட்டித் தொங்க விட்டிருந்தான்.

மாலை நேரம், தாம் வரைந்த ஓவியத்துக்கு மக்கள் என்ன மதிப்பீடு அளித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று அந்த இடத்துக்கு வந்தான். அங்கு அவனது ஓவியம் முழுக்க ‘X’ குறியீடுகளாக இருந்தன. அந்த நோட்டில் அவன் ஓவியத்தைப் பற்றிப் பல குறைகளை எழுதியிருந்தனர். சிலர், “இதெல்லாம் ஒரு ஓவியமா? இதைப் பொது இடத்தில் வேறு வைத்துக் கருத்து வேறு கேட்க வந்துவிட்டாய்…?” என்று மோசமாகவும் எழுதியிருந்தார்கள்.



இதைப் பார்த்த அவனுக்கு அழுகையே வந்து விட்டது. அழுதபடியே தனது ஓவிய ஆசிரியரிடம் சென்றான். தனது ஓவியம் இருக்கும் பரிதாப நிலையைக் காண்பித்து அழுதான்.

அந்த ஓவிய ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார். பின்னர், “நீ மிகச் சிறந்த ஓவியன். மற்றவர்களால் குறைகளே கண்டுபிடிக்க முடியாத ஓவியத்தை உன்னால் வரைய முடியும் என்று நான் நிரூபிக்கிறேன்” என்றார்.

அவனுக்கு ஓவியம் முழுக்க ‘X’ குறியீடுகளாக இருந்ததால் அவனுடைய திறன் மேலிருந்த நம்பிக்கையே போய் விட்டிருந்தது.

இருப்பினும் தனது ஆசிரியர் என்ன சொல்கிறார்? என பார்ப்போம் என்று அமர்ந்திருந்தான்.

அவர், “இளைஞனே, உன் கற்பனைத் திறத்தைப் பயன்படுத்தி நீ மறுபடியும் அதே ஓவியத்தை வரைந்து எடுத்து வா” என்றார்.

இளைஞன் அரைமனதுடன் ஒப்புக்கொண்டு செல்கிறான். அதே போல ஒரு ஓவியத்தை மேலும் நான்கு நாட்கள் பாடுபட்டு வரைந்து கொண்டு வந்தான்.

ஓவிய ஆசிரியர் அந்த ஓவியத்தை வாங்கிப் பார்த்து விட்டு, “சரி என்னுடன் வா!” என்று அவனை சந்தைக்கு அழைத்து சென்றார்.

அந்த ஓவியத்தை ஒரு இடத்தில் மாட்டி, அதனருகில், “சிறப்பு பெற்ற ஓவியரிடம் ஓவியக்கலை குறித்து நல்ல பயிற்சி பெற்று வந்திருக்கிறேன். நான் கற்றுக்கொண்ட ஓவியக் கலை குறித்து எனக்கு ஒரு மதிப்பீடு தேவைப்படுகிறது. இந்த ஓவியத்தில் தவறுகள் ஏதேனும் இருக்கலாம். அப்படி எங்காவது தவறு காணப்பட்டால் அந்த இடத்தில் இங்கிருக்கும் வண்ணங்கள் மற்றும் தூரிகையைப் பயன்படுத்தித் தவறைத் திருத்தம் செய்து உதவிட வேண்டுகிறேன் ” என்று எழுதி அதனருகில் தூரிகை மற்றும் வண்ணங்களை வைக்கச் சொன்னார்.

மாலை நேரம் அவனும் ஓவிய ஆசிரியரும் அந்த இடத்துக்கு மீண்டும் திரும்பி வந்தனர். ஓவியத்தை பார்த்த இளைஞனுக்கு மிகுந்த ஆச்சரியம். ஓவியம் எந்த இடத்திலும் திருத்தப்படவில்லை.

குருவுக்கு உள்ளுக்குள் தாம் எதிர்பார்த்தது மாதிரியே நடந்தது குறித்து மகிழ்ச்சி. இருந்தாலும் அவர் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.

“ஒருவேளை மக்களுக்குக் குறைகளை கண்டுபிடித்து அவற்றை திருத்தம் செய்ய ஒரு நாள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். இங்கே இந்த வார இறுதி முழுக்க இருக்கட்டும். நாம் அடுத்த வாரம் வந்து பார்க்கலாம். ஒருவேளை யாராவது திருத்தம் செய்யக்கூடும்…” என்று கூறிவிட்டு அவனை அழைத்து சென்றார்.



அடுத்த வாரம் வந்து பார்க்கிறார்கள். ஓவியம் எந்தவிதமான திருத்தமும் செய்யப்படாமல் அப்படியே இருந்தது. பல நாட்கள் வைத்துப் பார்த்தார்கள். அப்போதும் அப்படியே இருந்தது.

இளைஞன் நன்றியுடன் தனது குருநாதரின் கால்களில் வீழ்ந்தான்.

“குருவே என் திறமை மீது இப்போது எனக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டது. அதே போல இந்த உலகத்தையும் மக்களையும் நன்கு புரிந்து கொண்டேன். இனி அதற்கேற்றார்போல நடந்து கொள்வேன்!” என்றான்.

உலகத்திலேயே சுலபமான வேலை ஒருவர் பணியை விமர்சனம் செய்வது. ஆனால் அந்தப் பணியை செய்வது மிகமிகக் கடினமான ஒன்று என்பதை அவன் மட்டுமா புரிந்து கொண்டான்?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p395.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License