ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றனர். மாலையில் மீண்டும் இருவரும் கூடும் போது, ஒருவனிடம் அதிக விறகும், அவன் அதிகக் களைப்படையாமலும் இருந்தான்.
மற்றொருவனுக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மைப் போலத்தானே அவனும், ஆனால், அவனால் மட்டும் எப்படி? என்று அவனிடமே கேட்டான்.
நண்பன் அவனிடம், “இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய்? என்று கேட்டான்.
அவன், “நான் மரத்தை இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன்...” என்றான்.
“சிறிது கூட ஓய்வில்லாமலா?” என்று கேட்டான் நண்பன்.
“ஆம். அதிக விறகுகள் பெற வேண்டுமே என்பதற்காக இடைவிடாமல் வெட்டினேன். ஆனால், நீ சிறிது கூட களைப்படையாமல் இருப்பது எப்படி?” என்று கேட்டான்.
நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்.
மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை.
மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்.
மறுநாள் மரம் வெட்டப் பிரிந்து சென்ற பின், அவன் நண்பனைப் பின் தொடர்ந்து சென்றான்.
நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான். ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியைத் தீட்டிக் கொண்டிருந்தான்.
இப்போது தெரிகிறதா...?