ஒரு பணக்கார மாமியாருக்கு மூன்று மகள்கள். மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவளுக்குத் தன் மருமகன்களெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார்.
ஒரு நாள் மூத்த மருமகனை அழைத்துக் கொண்டு படகில் பயணம் செய்தாள். அவள் நடுவழியிலே தண்ணிக்குள் தற்செயலாக விழுவது போல விழுந்து விட, முதல் மருமகன் தண்ணீருக்குள் பாய்ந்து அவளைக் காப்பாறினார்.
மறுநாள் மூத்த மருமகன் வீட்டு வாசலில் ஒரு புத்தம் புதிய கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது. அந்த அட்டையில் இது “மாமியாரின் அன்புப் பரிசு" என்றிருந்தது.
இரண்டாவது மருமகனுக்கும் இந்தச் சோதனை நடந்தது. அவரும் “மாமியாரின் அன்புப் பரிசாக" ஒரு அழகிய காரைப் பரிசாக வென்றார்.."
மூன்றாவது மருமகனுக்கும் இந்தச் சோதனை நடந்தது.. மாமியார் படகு வழிப் பயணத்தில் தவறி விழுந்திட மருமகன் அவரைக் கடைசிவரை... காப்பாற்ற முன் வரவில்லை.
மாமியார் கடைசியில் பரிதாபமா மருமகனைப் பார்த்தாள்.
உடனே மருமகன் அவளிடம், “என்ன மாமியாரே! நீங்கள் உயிருடன் இருப்பதை விட போய்த் தொலை... எனக்கு எந்தக் காரும் வேணாம்... நான் சாகும் வரை சைக்கிளில் போய்க் கொள்கிறேன்... உன் மகளைப் பொண்ணாகவா வளர்த்து வச்சிருக்க... பேயா வளர்த்திருக்க...?" என்றான்.
மாமியார் மரணமடைந்தார்.
மறுநாள் மூன்றாவது மருமகன் வீட்டு வாசலிலும் ஒரு பளபளக்கும் வெளிநாட்டுக் கார் நின்று கொண்டிருந்தது. அந்தக் காரிலும் ஒரு அட்டையில் எழுதப்பட்டிருந்தது.
“மாமனாரின் அன்புப் பரிசு”