கல்லறையில் நல்லவர்கள்
ஒருமுறை ஒரு தாயும், அவரது ஏழு வயது மகனும் அவர்கள் வீட்டிற்கு அருகிலிருந்த கல்லறைத் தோட்டத்திற்குச் சென்றனர்.
கல்லறைத் தோட்டத்திற்கு அந்தச் சிறுவன் அப்போதுதான் முதல் முறையாக செல்கிறான்.
அவனது தாய் ஒரு குறிப்பிட்ட கல்லறையை நோக்கி நடந்து சென்று அங்கே அமர்ந்து கொண்டார்.
அந்தச் சிறுவனுக்குக் கல்லறை மைதானத்தை முழுமையாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. அவன் ஒவ்வொரு கல்லறையாகச் சென்று அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் படித்துக் கொண்டிருந்தான்.
இப்படி கல்லறை முழுக்கச் சென்று படித்து விட்டு, தன் தாயிடம் திரும்ப வந்து, “அம்மா, இங்கிருக்கும் அனைத்துக் கல்லறையிலும் நல்லவர்கள் என்றே எழுதியிருக்கிறதே! மோசமானவர்களை எல்லாம் எங்கே புதைப்பார்கள்?” என்றான்.
- சத்குரு சொன்ன கதைகள்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.