இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

நிலாவில் முயல்

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன், மிருகங்களால் மனிதர்களைப் போல் பேச முடிந்தது. அப்படிப்பட்ட அந்தக் காலத்தில், ஒரு காட்டில் ஒரு முயல், ஓர் ஓநாய், ஒரு கீரிப்பிள்ளை, ஒரு குரங்கு ஆகிய நான்கும் நெருக்கமான நண்பர்களாக இருந்தன.

ஒவ்வொரு மாலைப் பொழுதிலும், நான்கு மிருகங்களும் சேர்ந்து உட்கார்ந்து, அன்று நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி உரையாடுவதுண்டு. நால்வருள் முயல் மிகவும் அறிவாளியாகவும், குணசாலியாகவும் விளங்கியது. மனிதர்களின் அறிவுத்திறனைப் பற்றி நன்கு அறிந்திருந்த முயல், மனிதர்களைப் பற்றிய விஷயங்களைத் தன் நண்பர்களிடம் விவரமாக எடுத்துச் சொல்வது வழக்கம்.

ஒருநாள் இரவு நேரத்தில் வானில் பிரகாசித்த நிலவை முயல் உற்றுப் பார்த்தது. நிலவைக் கூர்ந்து கவனித்த முயல், "நாளைக்கு மனித குலத்தினர் விரதம் இருப்பார்கள். சூரியன் அஸ்தமனம் ஆகிய பிறகே உணவு உண்பார்கள். பகற்பொழுதில் ஏழை, எளியவர்களுக்குத் தான, தர்மங்கள் செய்வார்கள். நாமும் மனிதர்களைப் போல் நாளை விரதம் இருப்போம்... தானதர்மம் செய்வோம்..." என்றது.

மற்ற நண்பர்களும் சம்மதித்தனர். மறுநாள் பொழுது புலர்ந்ததும், கண் விழித்த கீரிப்பிள்ளை காலை ஆகாரத்தை உண்ண நினைக்கையில், விரதத்தைப் பற்றி ஞாபகம் வந்தது. "பகல் முழுவதும் உண்ணாமல் இருந்தால், இரவு மிகவும் பசிக்கும்... அதனால், இரவுக்கான உணவை இப்போதே தேடிக் கொள்கிறேன்" என்று எண்ணிக் கொண்டே, நதியை நோக்கிச் சென்றது.

அங்கு, ஒரு மீனவன் தான் அதிகாலையில் பிடித்த மீன்களை மணலில் புதைத்து வைப்பதைப் பார்த்தது. விரதநாளன்று திருடக்கூடாது என்பதனால், அவற்றைத் திருட்டுத் தனமாகத் தின்ன முயலவில்லை.

அதற்குப் பதிலாக, மீனவன் அந்த இடத்தை விட்டு அகலும் வரை காத்திருந்தது. அவன் சென்ற பிறகு, "இந்த மீன்களை இங்கே வைத்து இருப்பது யார்?" என்று உரக்கக் கூவியது. யாருமே அதற்குப் பதில் அளிக்காததால், அவை தனக்கே சொந்தம் என்று சாமர்த்தியமாக முடிவு செய்து, அந்த மீன்களை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று பதுக்கி வைத்தது. பிறகு தான, தர்மம் பற்றி மறந்து விட்டு, நாள் முழுவதும் தூங்கிக் கழித்தது.

குரங்கும், ஓநாயும் கீரிப்பிள்ளை போலவே நினைத்தன. இரவு மிகவும் பசிக்கும் என்பதால், அதற்குத் தேவையான உணவைத் தேடுவதில் முனைந்தன. ஓநாய் ஓரிடத்திலிருந்து சிறிது மாமிசத்தைத் திருடி மறைவிடத்தில் பதுக்கி வைத்துக் கொண்டது. குரங்கு ஒரு மாமரத்திலேறி, மாம்பழங்களைப் பறித்து ஓரிடத்தில் ஒளித்து வைத்தது. பிறகு, ஓநாயும் குரங்கும் நாள் முழுவதும் சோம்பேறித்தனமாகப் படுத்துத் தூங்கின.

அதிகாலையில் விழித்துக் கொண்ட முயல் முதன்முதலில் பனியில் நனைந்து, சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்த புற்களைப் பார்த்தது. "இரவு நேரமான பிறகு புல் தின்னலாம்... பகற்பொழுதில் விரதமிருப்போம்..." என்று சொல்லிக் கொண்டது.

"ஆனால், விரதமுறைப்படி யாராவது எளியவர்களுக்குத் தானம் அளிக்க வேண்டுமே... என்னைத் தேடி யாராவது மனிதன் வந்தால், அவனுக்குத் தானம் அளிக்க என்னிடம் புல்லைத் தவிர ஒன்றுமேயில்லையே... என்ன செய்வது?" என்று சிந்தனையில் ஆழ்ந்தது. பிறகு, "யாராவது என்னிடம் வந்தால், அவனுக்கு என்னையே உணவாகத் தந்து விடுகிறேன். மனிதர்களுக்கு முயல் மாமிசம் மிகவும் பிடிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..." என்று தீர்மானித்த பிறகு, மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றது.

முயல் மனத்தில் நினைத்ததை சாக்கா என்ற தேவதை அறிந்து கொண்டது. அந்த தேவதை வசிக்கும்இடம் மேகங்கள்... "முயல் உண்மையாகத்தான் கூறுகிறதா...? சோதித்துப் பார்க்கலாம்...!" என்று தேவதை தனக்குள் சொல்லிக் கொண்டது.

மாலையில், முயலை நாடிவந்த தேவதை, ஒரு முனிவரைப் போல் உருவம் எடுத்துக் கொண்டது. "முயலே! நான் இன்று முழுவதும் விரதம் இருந்ததால் மிகப் பசியாக இருக்கிறேன். எனக்கு ஏதாவது தின்னத் தருவாயா?" என்று கேட்டது.

"கட்டாயம் தருகிறேன். உங்களுக்கு முயலின் மாமிசம் பிடிக்கும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா?" என்றது.

"ஆமாம்!" என்றார் முனிவர்.

"அப்படியானால், என்னையே கொன்று தின்று பசியாறி விடுங்கள். உங்களுக்குத் தர வேறு எதுவும் என்னிடத்தில் இல்லை!" என்றது முயல்.

"நான் ஒரு முனிவர்! விரதநாளன்று, ஓர் உயிரைக் கொலை செய்யமாட்டேன்" என்று முனிவர் கூறினார்.

"அப்படியானால், உலர்ந்த குச்சிகளை சேகரித்துத் தீ மூட்டுங்கள். தீயினுள் நான் குதிக்கிறேன். பிறகு வறுபட்ட என் உடலை நீங்கள் தின்னலாம்!" என்றது முயல். முயலின் சொற்களைக் கேட்டு பிரமித்தார் முனிவர். ஆனால், அவருக்கு அப்போதும் அதன் சொற்களில் முழுநம்பிக்கை உண்டாகவில்லை.



அதனால் அதைச் சோதிக்க, காய்ந்த சருகுகளில் தீ மூட்டினார். அவர் சற்றும் எதிர்பாராதபடி, எந்தவிதத் தயக்கமுமின்றி முயல் தீக்குள் பாய்ந்து விட்டது. ஆனால், உடலைச் சுற்றித் தீ எரிந்த போதிலும், அதனுடைய தோல் கருகவில்லை. சொல்லப் போனால், குளிர்ச்சியாக இருந்தது. சற்றுநேரத்தில் தீ அணைந்து விட, முயல் தான் பச்சைப் பசேல் என்ற புல்தரையில் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு வியப்படைந்தது. அதன் முன்னால் முனிவரைக் காணவில்லை. அவர் இருந்த இடத்தில், சாக்கா தேவதை நின்று கொண்டு இருந்தது.

"நான்தான் சாக்கா தேவதை...! நீ சொன்னபடியே மிக சிரத்தையுடன் விரதம் காத்தாய்... மற்றவர் பசி தீர்க்க, உன்னையே பலியிடவும் நீ தயங்கவில்லை. ஆகவே, நீ ஒரு தெய்வப்பிறவி... உன்னுடைய தியாகத்தைப் பாராட்டி உனக்குச் சாகாவரம் அளிக்கிறேன்..." என்று அறிவித்த தேவதை தான் கையை நீட்டி மலையைத் தொட்டு அதிலிருந்து ஏதோ ஒரு மர்மப் பொருளையெடுத்து நிலவை நோக்கி வீசியெறிய, அது நிலவின் பரப்பில் ஒரு முயலாகத் தோற்றம் அளித்தது.

"இன்று முதல் உன் உருவம் நிலாவில் தெரியும். நிலாவைப் பார்க்கும் மனிதர்கள் அதில் “மற்றவர்களுக்கு மனமார அளித்தால், கடவுள் அதை உனக்குத் திருப்பித் தருவார்” என்ற நீதியை உன் உருவம் அவர்களுக்கு நினைவூட்டும்..." என்று சாக்கா தேவதை கூறியது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p422.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License