இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

மன்னனான யானைப்பாகன்

பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்துவர் காசியருகே ஒரு சன்னியாசியாகப் பிறந்திருந்தார். அவர் தினமும் பிச்சை எடுத்து வருவார். ஒரு நாள் அவர் ஒரு யானைப்பாகனின் வீட்டிற்குப் போனார். அந்த யானைப் பாகன் யானைகளைப் பிடிப்பதிலும் அக்கலையைப் பிறருக்குப் போதிப்பதிலும் மிகவும் திறமையானவனாக இருந்தான்.

சன்னியாசியைக் கண்ட யானைப் பாகன் அவரை மரியாதையுடன் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து போய் உணவு அளித்தான். பிறகு அவன் பணிவுடன் "தாங்கள் சிறிது நாட்களாவது என் வீட்டில் தங்கி இருந்து நான் அளிக்கும் உணவை ஏற்க வேண்டும்" என்று கூறினான். போதிசத்துவரும் யானைப்பாகனின் வீட்டில் ஒரு வார காலம் இருந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பும் போது அவர் யானைப்பாகனுக்கு நல்லாசிகள் கூறி விட்டு சென்றார்.

ஒரு நாளிரவு ஒரு விறகு வெட்டி ஒரு கோயில் மண்டபத்தில் படுத்துக் கொண்டிருந்தான். அதனருகே இருந்த மரத்தின் மீது சில கோழிகள் இருந்தன. மரத்தின் கீழ் ஏதோ சத்தம் ஏற்படுவது கேட்டு மரத்தின் மீதிருந்த ஒரு கோழிக் குஞ்சு பயந்து நடுங்கிக் கீழே வேறொரு கிளையிலிருந்த கோழிக் குஞ்சின் மீது விழுந்து அதன் தூக்கத்தைக் கலைத்தது.

தூக்கம் கலைந்த கோழிக் குஞ்சு "அடேயப்பா! உனக்கு அவ்வளவு கர்வமா? என் பெருமை தெரியாதா? என்னைச் சாப்பிடுபவனுக்குப் புதையல் கிடைக்குமே" என்றது. அது கேட்டு அதன் மீது விழுந்த கோழிக் குஞ்சு "என்னைச் சாப்பிடுபவன் ராஜாவாகி விடுவானே" என்றது. இரு கோழிக் குஞ்சுகள் பேசியதை மண்டபத்தில் படுத்திருந்த விறகு வெட்டி கேட்டு விட்டான். அவன் மூளை வேகமாகச் செயல் படத் தொடங்கியது. அவன் “எனக்குத்தான் என்ன அதிர்ஷ்டம்... இங்கே ஒரு கோழிக் குஞ்சு உள்ளது. அதனைப் பிடித்துக் கொன்று நான் சாப்பிட்டு விட்டால் இந்நாட்டின் மன்னனாகி விடுவேன். இனிமேல் கஷ்டப்பட்டு விறகு வெட்டி, அதை விற்றுப் பிழைக்க வேண்டாம்” என எண்ணினான். அவன் சற்று நேரம் கழித்து மரத்தின் மீதேறினான். எந்தக் குஞ்சு தன்னைச் சாப்பிட்டால் ஒருவன் ராஜா ஆவான் என்று கூறியதோ அதனை அவன் பிடித்துக் கொண்டு கீழே இறங்கித் தன் வீட்டிற்குப் போனான்.

தன் மனைவியிடம் விஷயத்தைக் கூறி அவன் அக்குஞ்சை நன்கு வாட்டிச் சமைத்து வைக்கச் சொன்னான். அவளும் தான் ராணியாக போவதை நினைத்து உற்சாகத்துடன் அந்தக் கோழிக் குஞ்சைக் கொன்று நன்கு வாட்டி சமைத்து ஒரு சிறு கலயத்தில் எடுத்து வைத்தாள். அப்போது விறகு வெட்டி "நாம் இருவரும் இதனை எடுத்துக் கொண்டு ஆற்றிற்குப் போவோம். நன்கு குளித்து கடவுளை வணங்கி விட்டு நிதானமாக இதைச் சாப்பிடுவோம்" என்றான். அவளும் அவன் கூறியதற்கு சம்மதித்து கலயத்தை எடுத்துக் கொண்டு ஆற்றிற்குக் கிளம்பினாள்.

ஆற்றின் கரையில் அக்கலயத்தை அவர்கள் வைத்து விட்டு குளத்தில் குளித்தார்கள். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் வரவே விறகு வெட்டியும் அவன் மனைவியும் உயிர் தப்ப நீந்தி எங்கோ போய் கரை சேர்ந்தார்கள். அவர்கள் வைத்திருந்த கலயம் ஆற்று வெள்ளத்தில் மிதந்தவாறே போனது. விறகு வெட்டியோ "ஐயோ! இந்த நாட்டின் மன்னனாகும் அதிர்ஷ்டம் எனக்கு இல்லையே" எனத் தன் மனைவியிடம் கூறிக் கண்ணீர் வடித்தான்.

அதே சமயம் ஆற்றில் சிறிது தூரத்தில் போதிசத்வருக்கு உணவளித்த யானைப்பாகன் ஒரு யானையை ஆற்றில் குளிப்பாட்டிக் கொண்டு இருந்தான். அவன் கண்ணில் ஆற்றில் மிதந்து வரும் கலயம் தென்பட்டது. அவன் அதனைப் பிடித்து எடுத்தான். அதில் நன்கு பக்குவப்படுத்தப் பட்ட கோழிக் குஞ்சின் மாமிசம் இருப்பது கண்டு, அதனை எடுத்து உடனேயே வாயில் போட்டு மென்று தின்று விட்டான்.



இது நடந்த மூன்றாவது நாள் காசி மீது அண்டை நாட்டு மன்னன் படை எடுத்து வந்தான். அது கண்டு காசி மன்னன் பயந்து போனான். அவன் இயல்பாகவே ஒரு தொடை நடுங்கி. போர் என்றால் பயந்து விடுவான். ஆகையால் அண்டை நாட்டு மன்னன் திடீரெனப் படை எடுத்து வந்ததும் தான் எப்படியாவது உயிர் தப்ப வேண்டுமென நினைத்து யானைப்பாகன் போல வேடம் பூண்டு யானைப்பாகனை அரசனின் ஆடைகளை உடுத்திக் கொள்ளச் சொன்னான். பிறகு அவனை யானை மீது உட்கார வைத்துத் தான் யானைப்பாகனின் இடத்தில் அமர்ந்தான். எதிரிகள் விட்ட அம்புக் குறி தவறி யானைப்பாகனாக வேடம் பூண்ட அரசனின் மீது பட அவன் இறந்து விழுந்தான்.

யானை மீது அமர்ந்திருந்த யானைப்பாகனோ போர்களத்தில் இருந்து ஓடாமல் வீரர்களை உற்சாகப்படுத்திப் போர் புரியச் சொன்னான். போர்க்களம் என்றால் நடுங்கும் மன்னனா இப்படி போர் புரிகிறான் என அனைவரும் நினைத்தனர். மன்னனாக இருந்த யானைப்பாகனும் வீராவேசத்துடன் போர் புரிந்தான். எதிரிப்படை பின் வாங்கி ஓடி விட்டது. அண்டை நாட்டு மன்னன் இறந்து போனான்.

போர் முடிந்ததும் யானை மீது இருந்தது உண்மையில் மன்னன் அல்ல என்றும் மன்னன் வேடத்தில் யானைப்பாகன்தான் இருந்தான் என்றும் எல்லாருக்கும் தெரிந்தது. இறந்த காசி மன்னனுக்குக் குழந்தைகளே இல்லை. அதனால் யாவரும் "முன்பு இருந்த அரசனே தன் ஆடைகளை இந்த யானைப்பாகனுக்குக் கொடுத்ததால் இனி நம் மன்னன் இவனே..." என்றனர்.

மந்திரியும் புரோகிதரும் சேனாதிபதியும் மக்கள் எண்ணப்படியே யானைப்பாகனை மன்னன் ஆக்கினார்கள். அவனும் நன்கு ஆட்சி புரியலானான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p423.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License