ஒரு ஜென் துறவி தனது சீடனுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது, எதுவோ சந்தேகம் வர அவர் ஒரு புத்தகத்தைக் காண்பித்து இதில் உள்ளதைப் படித்துச் சொல் என்றார்.
அதற்கு மாணவன் படித்துச் சொல்லிய பின், "குருவே உங்களுக்குப் படிக்கத் தெரியாது, ஆனாலும் எப்படி நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லித் தருகிறீர்கள்?" என்று கேட்டான்.
அதற்கு அவர் அவனை வெளியில் அழைத்துச் சென்று, "அங்கே பார், அது தான் நிலா!" என்று சொன்னார்.
பின் அவர் சொன்னார்,
"புத்தகம் என்பது என் கை போன்றது. கையால் நிலவைச் சுட்டிக் காட்டியதால் என் கை நிலவாக ஆகிவிடாது. என் கை இல்லாமலும் நிலவைப் பார்க்க உன்னால் முடியும். அப்படி பார்க்க முடியாத நேரத்தில் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது, கையின் தொடர்பு நிலவைச் சுட்டிக்காட்டிய உடன் முடிந்து விட்டது. அதற்கு மேல் எப்போது வேண்டுமானாலும் என் கை துணையின்றி நிலவைப் பார்க்கலாம்”