சிறந்த வேலைக்காரன்
ஓரிடத்தில் கல் உடைக்கும் பணி வெகு மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. அந்த வேலையில் பலரும் ஈடுபட்டிருந்தார்கள்.
அங்கு வந்த ஒருவர் “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று அங்கிருந்த மூன்று பேர்களிடம் கேட்டார்.
ஒருவன், “ கல் உடைத்து கொண்டிருக்கிறேன் “ என்றான்.
இரண்டாமவன், “அகலமும் நீளமாக கல்லை உடைத்து கொண்டிருக்கிறேன்” என்றான்.
மூன்றாமவன், “கோவில் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன். நான் உடைக்கும் கல் அருகிலிருக்கும் கோயிலின் சுற்று சுவருக்கானது” என்றான்.
மூன்றாமவனுக்குத் தொழிலைப் புரிந்து கொண்டு சிறப்பாகச் செய்வதாகக் கூறி தான் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார் அவர்.
யார் அவர் என்றுதானே கேட்கிறீர்கள்.
அவர்தான் அந்த நாட்டின் அரசன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.