பொய் சொல்லி உதவி பெறலாமா?
பொழுது விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் போர் நடப்பதாக இருந்தது.
மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசனின் உதவி பெறுவது பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
மன்னர், “பக்கத்து நாட்டு அரசன் நாம் எதைக் கொடுத்தால் நமக்கு உதவுவான்?” என்று கேட்டார்.
“மன்னரே! பக்கத்து நாட்டு மன்னன் நேர்மையான ஆள். அவருக்கு நாம் எதையாவது கொடுக்க நினைத்தால் அவர் நமக்கு எதிரியாகி விடுவார்” என்றார் மந்திரி.
ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, மந்திரி மதுமயக்கத்தில் இருந்த மன்னரிடம் கேட்டார்.
“மன்னா! நம் வெற்றிக்கு பக்கத்து நாட்டு மன்னன் எப்படி நமக்கு உதவினார்? எதைக் கொடுத்து அவரை நம் பக்கம் கொண்டு வந்தீர்கள்?”
“எதிரி நாட்டு அரசன் கொடுக்கச் சொன்னதாகச் சொல்லச் சொல்லி, நம் ஒற்றனிடம் ஒரு பரிசுப்பொருளைக் கொடுத்தனுப்பினேன், அவர் நமக்கு நண்பனாகி விட்டார்” என்று பதிலளித்தார் மன்னர்.
பக்கத்து நாட்டு அரசன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோபம் கொண்டான்.
அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை தலைகீழாகி விட்டது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.