எது சிறப்பானது?
நகரத்து எலி ஒன்று வயல் எலி ஒன்றைச் சந்தித்தது.
தான் இருக்கும் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தது அந்த நகரத்து எலி. அந்த வீட்டு மனிதர்கள் விருந்தை முடித்துப் போன பிறகு இரண்டு எலிகளும் மேசை மேல் சிந்தியிருந்தவற்றைத் தின்றன. விருந்து மிகப் பிரமாதமாக இருந்தது. ஆனால், சாப்பிடும் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அறை வாசலில் சத்தம் கேட்டது. உடனே நகரத்து எலி மறைவிடம் தேடி ஓடியது. வயல் எலி அதைப் பின் தொடர்ந்தது.
உள்ளே வந்த மனிதன் வெளியேறிய பிறகு, அங்கே அமைதி நிலவியது. "வா, நாம் சாப்பிட்டு முடிக்கலாம்" என்றது வீட்டு எலி. "போதும்! நாளை நீ என் இருப்பிடத்திற்கு வா! இதைப் போன்ற விருந்து என்னால் தர முடியாது. ஆனால் இடையூறு இல்லாமல்அமைதியாகச் சாப்பிடலாம். அச்சமும், மகிழ்ச்சியும் உள்ளதை விட நான் எளிமையும், நிறைவும் உள்ளதையே நான் விரும்புகிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சென்றது வயல் எலி!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.