ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக மின்னஞ்சல் முகவரி கேட்டார்கள்.
‘மின்னஞ்சல் முகவரியா? எனக்கு அதெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன்.
‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு மின்னஞ்சல் முகவரி இல்லையா...? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.
வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் வைத்திருந்த பணத்தை வைத்துச் சந்தையில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதிக்குக் கொண்டு போய் அந்த வெங்காயத்தைக் கூவிக் கூவி விற்றான். சிறிது பணம் லாபமாகக் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் வாங்கி... மீண்டும் வெங்காயம் விற்பன... இப்படியே சிறிது சிறிதாக விற்றுச் சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டான்.
இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பு சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.
அவனுடய மின்னஞ்சல் முகவரி கேட்டார்.
வியாபாரி, ‘மின்னஞ்சல முகவரி இல்லை’ என்று பதிலளித்தார்.
‘மின்னஞ்சல் இல்லாமலேயே, இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் மின்னஞ்சல் முகவரி, இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்...?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.
‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நான் தரையைத் துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.