பிரச்சனையைத் தீர்க்க என்ன வழி?
குருவும் சீடர்களும் காட்டு வழியே பயணம் செய்தனர்.
அப்போது குரு தன் சீடர் ஒருவரிடம் அதோ அந்தச் செடியை பிடுங்கு என்றார். சீடர் உடனே பிடிங்கி எறிந்தார்.
சிறிது தொலைவு சென்றதும், முன்பை விட சற்று பெரிய செடியைக் காட்டி அதைப் பிடுங்கு என்றார் குரு.
மற்றொறு சீடர் வெடுக்கென பிடுங்கி எறிந்தார்.
கொஞ்ச தூரம் குருவும் சீடர்களும் நடந்தனர். இப்போது குரு ஒரு சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த செடியைக் காட்டிப் பிடுங்கு என்றார்.
முதலாமவர் முயன்றார் முடியவில்லை. மற்றொறு சீடர் முயன்றார், முடியவில்லை, அனைத்துச் சீடர்களும் முயன்று முடியவில்லை.
அவர்கள், எங்களால் முடியவில்லை என்றனர்.
குரு, “நம் பிரச்சினைகளும் இந்த செடியை போலத்தான்” என்றார்.
புரியாத சீடர் ஒருவர், “அது எப்படி செடியும் பிரச்சினையும் ஒன்றாகும்?” என்று கேட்டார்.
குரு சிரித்தபடியே, “சிறிய செடியை உங்களால் பிடுங்க முடிந்தது. ஆனால் சற்றே பெரியதான செடியைப் பிடுங்க முடியவில்லை. அது போல பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாம், வளரவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது” என்றார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.