கழுதையின் கருத்திலும் உண்மை!
ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான்.
அவன் பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய் விடலாம். நம்முடைய எதிரிகள் வருகிறார்கள்” என்றான்.
உடனே அந்தக் கழுதை, “நான் வரவில்லை. நீ வேகமாக ஓடு” என்றது.
“ஏன்? உனக்கு எதிரியைக் கண்டு பயமில்லையா?” என்று அவன் கழுதையைப் பார்த்துக் கேட்டான்.
“நான் ஓடிப்போவதால் எனக்கு எந்தப் பயனுமில்லை. நான் உன்னிடமிருந்தாலும் பொதி சுமக்கத்தான் போகிறேன். எதிரிகளிடம் மாட்டிக் கொண்டாலும் நான் பொதி சுமக்கத்தான் போகிறேன். நான் எதற்குத் தேவையில்லாமல் ஓடிப் போக வேண்டும்?” என்றது.
கழுதையின் கருத்திலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.