எலிக்கு வந்த சந்தேகம்
ஒரு நாள் எலி ஒன்றைப் பூனை ஒன்று துரத்த... தன் உயிரைக் காத்துக்கொள்ள எலி வேகமாகத் தன் வலைக்குள் புகுந்தது.
எலியைக் காணாத பூனை திரும்பிச் சென்றது.
வெளியே வந்த எலி நத்தை ஒன்று மெதுவாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தது.
நத்தையை கேலி செய்த எலி, “நத்தையே உன் முதுகில் வீட்டைச் சுமந்து செல்கிறாயே... நான் எவ்வளவு வேகமாக ஓடுகிறேன். அதனால் ஆபத்திலிருந்து என்னால் தப்பிக்க முடிகிறது. எனக்கு வரும் திடீர் ஆபத்தைப் போல் உனக்கு வந்தால், உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டது.
அதற்கு நத்தை, “எலியே, நீ உயிருக்கு பயந்து வேகமாக ஓட வேண்டும். சில சமயம் பூனையிடம் மாட்டிக் கொண்டால் உன் சாவு நிச்சயம். ஆனால் எனக்கு அந்தப் பயமில்லை... நான் என் பாதுகாப்புக்காக என் கூட்டை முதுகில் சுமந்து செல்கிறேன். எனக்கு ஆபத்து வரும் நேரத்தில் என் உடலை இந்தக் கூட்டுக்குள் இழுத்துக் கொண்டு பாதுகாப்பாக பதுங்கிக் கொள்வேன்” என்றது.
அப்போதுதான் எலிக்குப் புரிந்தது. நத்தைக்கு அதன் கூடு சுமையல்ல... என்று.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.