இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

மரங்களுக்குக் கால் முளைத்தால்...?

அந்தத் தோட்டத்திலிருந்த பெரிய மரத்துக்கு நீண்ட நாட்களாகவே ஓர் ஆசை! அதைப் பிற மரங்களிடமும் அடிக்கடிச் சொல்லும். இதனால் மற்ற மரங்களுக்கும் அந்த ஆசை வந்து விட்டது.

எல்லாம் சேர்ந்து இறைவனை அழைத்தன.

அவைகளின் முன்பாக இறைவன் தோன்றினார்.

"என்ன மரங்களே! எதற்காக அழைத்தீர்கள்?" என்று கேட்டார்.

"இறைவா‚ எங்கள் கிளைகளில் கூடு கட்டி வசிக்கும் பறவைகள் எல்லாம் நினைத்த நேரத்தில் வெளியே செல்கின்றன. சுதந்திரமாக வானில் பறக்கின்றன. எங்கள் நிழலில் இளைப்பாறும் மனிதர்களும் விலங்குகளும் தாங்கள் விருப்பப்பட்ட இடத்துக்குச் செல்கிறார்கள். ஆனால் நாங்கள் மட்டும் எப்போதும் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறோம்" என்றது ஆலமரம்.

"பிறந்தது முதல் இறுதி வரை ஒரே இடத்திலேயே இருக்கிறோம். இதனால் உலகில் என்ன நடக்கிறது என்பதே எங்களுக்குத் தெரிவதில்லை. அப்படியே நாங்கள் வெளி உலகைக் காணச் செல்வதாக இருந்தால் அது எங்கள் மரணத்துக்குப் பின்தான் நடக்கிறது" என்று வருந்தியது அரச மரம்.

"எல்லா உயிரினங்களுக்கும் கால்கள் அல்லது இறக்கைகளைக் கொடுத்த நீங்கள் எங்களை மட்டும் ஏன் இப்படிப் படைத்தாய்?" என்று கேட்டது பனைமரம்.

"கிளைகள்தான் உங்கள் இறக்கைகள்;வேர்கள்தான் உங்கள் கால்கள்” என்றார் கடவுள்.

“வேர்களா கால்கள்? அவை எங்களைச் சிறைப்பிடித்திருக்கும் விரோதிகள் எங்களுக்கு வேர்கள் எதுவும் வேண்டாம். அதற்குப் பதிலாக மனிதர்களைப் போல் கால்களைக் கொடுங்கள்” என்று கோபப்பட்டது வேப்பமரம்.

“என்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் ஒரு பொருள் இருக்கிறது” என்றார் இறைவன்.

இதைக் கேட்ட முருங்கை மரம், “எங்களுக்கு எந்த விளக்கமும் வேண்டாம். எங்களுக்குக் கால்களைத் தந்து எங்களையும் உலகம் சுற்ற அனுமதிக்க வேண்டும்” என்றது.

இதைக் கேட்ட இறைவன், “சரி, உங்கள் விருப்பப்படி உங்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் கால்களைத் தருகிறேன். நீங்கள் எங்கே செல்ல விரும்புகின்றீர்களோ... அங்கே சென்று விட்டு வாருங்கள். அதன் பிறகு கால்கள் நிரந்தரமாக வேண்டுமா‚ இல்லையா என்பதை நாளை என்னிடம் சொல்லுங்கள்..." என்று இறைவன் வரமளித்தார்.

மரங்களுக்குக் கால்கள் முளைத்தன. மரங்கள் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தன. உடலைச் சிலுப்பிக் கிளைகளில் கூடு கட்டி இருந்த பறவைகளை விரட்டின. "இனிமேல் எங்கள் மீது வந்தமர்ந்தால் தொலைத்து விடுவோம்" என்று பறவைகளை மிரட்டின.

பாவம் பறவைகள் தங்களுக்குக் குடியிருக்க இடமில்லாமல் போனதே என்று தவித்தன.

மரங்கள் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தோட்டத்தை விட்டுக் கிளம்பின. சாலைகளில் சந்தோசமாக ஓடின. உயரமான கட்டடங்களையும் விதவிதமான வாகனங்களையும் கண்டு மகிழ்ச்சியடைந்தன. இரவு நேரத்தில் அனைத்து மரங்களும் கடற்கரைக்கு வந்து சேர்ந்தன. மண்ணில் குதித்துக் குதித்து விளையாடின.

இதைக் கண்ட கடல் அலை ஆச்சரியப்பட்டது. "ஏய் மரங்களே! நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?" என்று கேட்டது. "இறைவனிடம் வரம் வாங்கினோம். வேர்களுக்குப் பதிலாக கால்களைக் கொடுக்குமாறு கேட்டோம்" என்றது அரசமரம்.

"பாவம் நீ கூட ஒரே இடத்திலேயே வருவதும் போவதுமாக இருக்கிறாய். ஊருக்குள் செல்ல நீயும் இறைவனிடம் வரம் கேள்" என்றது வேப்ப மரம்.

கடல் அலை சிரித்தது. "அது போன்ற பைத்தியக்காரத்தனமான வரம் எனக்கு வேண்டாம்" என்றது.

"அப்படியானால் நாங்கள் பைத்தியக்காரர்களா?" அன்று கோபமாக முறைத்தது முருங்கை மரம்.



"அதில் என்ன சந்தேகம்? சாபத்தை வாங்கி வந்து விட்டு‚ வரம் வாங்கியதாகச் சொல்கிறீர்களே. உங்களுக்குப் பெருமை சேர்ப்பதே காய்களும் கனிகளும்தான். அவற்றை மற்ற உயிரினங்கள் உண்டு வாழ்கின்றன. அந்தக் காய்களும் கனிகளும் நீங்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு மண்ணின் சத்தையும் நீரையும் பெறுவதன் மூலம் கிடைக்கிறது. வேர்கள் தான் அவற்றைப் பெற்றுத் தருகின்றன. அந்த வேர்களையே உதறிவிட்டு இங்கும் அங்குமாக நடமாடினால் எப்படிக் கனிகளைப் பெற முடியும்?"

"நீ என்ன சொல்கிறாய்? நாங்கள் செய்தது தவறா?" என்று கேட்டது ஆலமரம்.

"ஆமாம். உங்கள் கிளைகளில் பறவைகள் வசிக்கின்றன. நிழலில் உயிரினங்கள் தங்குகின்றன. இப்படி அடுத்தவருக்கு உதவும் அற்புதமான வரத்தை இறைவன் தந்திருக்கிறார். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்! நான் இங்கே இருக்கும் வரைதான் மதிப்பு. குழந்தைகள் தேடிவந்து சந்தோசமாக கால்களை நனைக்கிறார்கள். அதுவே நான் ஊருக்குள் சென்றால் என்ன ஆகும்? எல்லோரும் என்னைத் திட்டுவார்கள். யாருக்கும் பயனில்லாமல் துன்பம் கொடுப்பது வரமா? அல்லது மற்றவர்களை மகிழ்விப்பது வரமா?" என்று கேட்டது கடல் அலை.

மரங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. "கடல் அலையே‚ நீ சொல்வது சரிதான். புத்திகெட்டு இப்படி ஒரு வரத்தை... தவறு... தவறு... சாபத்தை வாங்கி வந்து விட்டோம். இப்போதே இறைவனிடம் வேண்டி‚ எங்களை முன்பு போலவே மாற்றிக் கொள்கிறோம். அடுத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தி வாழ்கிறோம்" என்றது அரசமரம்.

கடல் அலை கையசைத்து விடை கொடுக்க‚ மரங்கள் அனைத்தும் இறைவனைத் தேடிக் கிளம்பின.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p487.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License