இரக்கத்தால் வந்த வினை!
ஒரு மனிதன் காட்டுக்குள் சென்று மரங்களைப் பார்த்து, மரங்களே என் கோடாலிக்கு ஒரு கைப்பிடி கொடுக்க மாட்டீர்களா? என்று கேட்டான்.
மனிதன் மீது இரக்கங் கொண்ட ஒரு மரம், தான் கொடுப்பதாகச் சொல்லியது.
அந்த மரத்திலிருந்து ஒரு கைப்பிடியைத் தன் கோடாலிக்குப் போட்டதும் அவன் அங்குள்ள மரங்களை வெட்ட ஆரம்பித்தான்.
வெகு சீக்கிரம் பல மரங்கள் கீழே விழுந்தன.
அதைப் பார்த்த ஒரு வயதான மரம், நம்மவன் ஒருவன் அந்த மனிதனுக்குக் கைபிடி கொடுக்கா விட்டால், இத்தனை மரங்களை அவன் வெட்டியிருக்க முடியுமா? என்று சொல்லி வருத்தமடைந்தது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.