நாயின் தனித்திறன்
ஒரு வேட்டைக்காரன். அவனிடம் இருந்த வேட்டை நாய் தண்ணீரின் மேல் நடக்கும்.
தன் நண்பன் ஒருவனிடம் இந்த நாயின் தனித்திறனைக் காண்பிப்பதற்காக வேட்டைக்கு கூட்டிச் சென்றான்.
ஒரு குளக்கரையில் இருந்து கொண்டு அங்கே நீந்திக் கொண்டிருந்த வாத்துகளைச் சுட்டான். ஒவ்வொரு முறையும் அந்த விசித்திர நாய் தண்ணீரில் நடந்து போய் சுடப்பட்ட வாத்துகளைத் தன் வாயில் கவ்வி எடுத்து வந்தது.
வேட்டைக்காரன் தன் நண்பனைப் பார்த்து “என் நாயின் தனித்திறனைப் பார்த்தாயா? ” என்று கேட்டான்.
“ஆமாம். உன் நாய்க்கு நீந்தத் தெரியாது போலிருக்கே” என்றான் அவன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.