குடிசையில் கிடைத்த அறிவுரை!
முன்னொரு காலத்தில் போரில் தொடர்ந்து தோல்வியை தழுவிய ஒரு குறுநில மன்னர் ஒருவர், இளைப்பாறுவதற்காக அருகிலிருந்த ஒரு மூதாட்டியின் குடிசையில் தஞ்சம் புகுந்தார்.
அம்மூதாட்டி, அம்மன்னரின் பசியைப் போக்க ஆப்பம் தந்தார்.
அதிகப் பசியின் காரணமாக, அவசரமாக அந்த ஆப்பத்தின் நடுவில் கையை வைத்த அம்மன்னர், தன் விரல்களை சுட்டுக் கொண்டார்.
'உன் அவசர புத்தியால் கையைச் சுட்டுக் கொண்டாயே, ஆப்பத்தை ஓரத்திலிருந்து சாப்பிடத் தொடங்கி, நடுப்பகுதியை இறுதியில் சாப்பிட்டால் சுடாது' என்றும், 'போரிலும் நீ, இதுபோன்ற அவசர புத்தியினால்தான் தோல்வியைத் தழுவி இருப்பாய்' என்றும் அந்த மூதாட்டி கூறினார்.
அவர் சொன்னதில் ஒரு உண்மையிருப்பதை உணர்ந்த அந்தக் குறுநில மன்னன், தன் போர் யுக்திகளை மாற்றிக் கொண்டு, பெரிய மன்னனை வென்றார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.