கோப்பையைக் காலி செய்!
கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் புகழ் பெற்ற ஜென் துறவி ஒருவரைச் சந்திக்கச் சென்றார்.
பேராசிரியர் ஜென் தத்துவங்களைப் பேசிக் கொண்டிருந்தார், தான் ஜென் பற்றி மேலும் கற்க விரும்புவதாகக் கூறினார்.
தேனீர்க் கோப்பையை எடுத்துக் கொண்டு வந்த ஜென் துறவி, கோப்பையின் நுனி வரை தேனீரை ஊற்றினார். அந்தக் கோப்பை நிரம்பி வழிந்தது.
கோபத்துடன் பேராசிரியர், “கோப்பை நிரம்பி விட்டது. மேலும் ஊற்ற முடியாது. நிறுத்துங்கள்” என்று கத்தினார்.
துறவி கூறினார்: “நீங்களும் இந்த கோப்பையைப் போலத்தான். உங்கள் கோப்பையைக் காலி செய்யாவிடில், நான் எவ்வாறு ஜென் பற்றி கற்றுக் கொடுப்பது?”
பேராசிரியர் அதன் பிறகு ஒன்றும் பேசவில்லை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.