ஒரு பார்வை இழந்த பிச்சைக்காரன் உணவுக்காக பிச்சை கேட்டபடி நடந்து கொண்டிருந்தான்.
அவன் சிறந்த புத்திசாலி. ஆனால், அதைப் பயன்படுத்தி ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவன் மனதில் நீண்ட காலமாக இருந்தது.
பசி மயக்கத்துடன் அவன் ஓரிடத்தில் அமர்ந்தான்.
அவன் மீது இரக்கம் கொண்ட ஒரு தேவதை அவன் முன்னால் வந்து, “உனக்கு நான் ஒரு வரம் தருகிறேன்... உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்?” என சொன்னது.
மகிழ்ச்சியோடு அவன் வாய் திறந்தபோது தேவதை சொன்னது.
“நீ வரம் கேட்பதற்கு முன்பாகச் சிறிது யோசித்துக்கொள். நான் உனக்கு ஒரே ஒரு வரம் தான் தருவேன், அதையும் நீ ஒரே வாக்கியத்தில்தான் கேட்க வேண்டும்”
அவன் பதறாமல், “என் வீட்டு மூன்றாவது மாடியிலிருந்து, என் தோட்டத்தில் என் குழந்தை விளையாடுவதைப் பார்க்கும் வரம் எனக்கு வேண்டும்” என்றான்.
தேவதையும் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்துச் சென்றது.
இதன் மூலம் புத்திசாலிகள் எந்த சூழ்நிலையிலும் சிறப்பை அடைவார்கள் என்பதை உணர முடிகிறது.