சுவாமி ராமதீர்த்தர் அமெரிக்கா சென்றார்.
உடன் வந்த பயணிகள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர்.
சுவாமி எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.
தனியாக நின்ற அவரைக் கண்ட ஒரு அமெரிக்கர் அவரிடம் வந்து, “நீங்கள் எங்கே போகவேண்டும்? உங்கள் உடமைகள் எங்கே?அறிமுகக் கடிதம் ஏதேனும் உள்ளதா?”என்று கேட்டார்.
சுவாமி, “எனக்கு உடமைகள் எதுவும் கிடையாது. என்னிடம் பணமும் எதுவுமில்லை. அறிமுகக் கடிதம் எதுவும் கிடையாது” என்றார்.
ஆச்சரியமடைந்த அந்த அமெரிக்கர், “அப்படியானால், நீங்கள் இங்கு எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்? இங்கு நண்பர்கள் யாரேனும் இருக்கிறார்களா?” என்று கேட்டார்.
ராமதீர்த்தர் புன்னகையுடன் அந்த அமெரிக்கரின் தோளில் கையை வைத்து, “எனக்கு ஒரு நண்பர் இங்கே இருக்கிறார்” என்றார்.
அவரும், “அவர் எங்கேயிருக்கிறார்?” என்று கேட்க,
சுவாமி, “அவர் நீங்கள்தான்” என்றார்.
இதைக் கேட்ட அந்த அமெரிக்கர் மனம் நெகிழ்ந்து போனார். பின் அவரே அவருக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார்.