சல்லடையா? முறமா?
தனது குருகுலத்தில் பல ஆண்டுகள் பயின்று வெளியில் செல்லவிருந்த சீடனைப் பார்த்து, அந்தக் குரு சொன்னார்.
“நீ முறம் மாதிரி இரு... சல்லடை மாதிரி இருக்காதே...”
அந்தச் சீடனும், “சரி சுவாமி, நான் முறமாகவே இருக்கிறேன்” என்றான்.
இதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
சல்லடை, நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கழிவுகளையும், கல்லையும் மண்ணையும் தான் வைத்துக் கொள்ளும். முறமோ, பதர், கல், மண் போன்றவற்றைக் கீழேத் தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும்.
இப்போது புரிகிறதா...?
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.