கடவுள் தந்த ஆற்றலா?
ஒரு உலகப் புகழ் பெற்ற இசை மேதை ஒருவர் வழக்கம்போல அபாரமாக பியானோ வாசித்தார்.
அந்த அரங்கில் கூடியிருந்தவர்கள் அனைவரும் தங்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.
அவர் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்தார். அவரைப் பலரும் சூழ்ந்து கொண்டு பாராட்டினர்.
அப்போது ஒரு பெண்மணி, அவர் கரங்களைப் பற்றி கொண்டு முத்தமிட்டு, உங்கள் கைகள் இரண்டும் சிறப்பானவை. யாருக்கும் தராத சிறப்பான ஆற்றலைக் கடவுள் உங்களுக்கு வழங்கி இருக்கிறார் என்றார் அப்பெண்மணி.
அதைக் கேட்ட அம்மேதை, “அம்மணி, இது கடவுள் அளித்த ஆற்றல் இல்லை, தினம்தோறும் என்னுடைய எட்டு மணி நேர பயிற்சியின் பலன்தான் இது. முயற்சியும் பயிற்சியும் இருந்தால், நீங்களும் இப்படி வாசிக்கலாம்” என்றார் அந்த இசை மேதை.
அந்த இசை மேதை யார் என்றுதானே கேட்கிறீர்கள்?
செவிப்புலன் பாதிப்புற்ற பீத்தோவன் என்பவர்தான் அந்த இசைமேதை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.