பேசக்கற்றுக் கொண்ட பூனை
ஒரு குட்டிப் பாப்பா ஒருநாள் பூனைக்குப் பேசக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தாள்.
”பூனை, அம்மா சொல்லு”
பூனை சொன்னது “மியாவ் மியாவ்”
குட்டிப்பாப்பா சொன்னாள், “பூனை, அப்பா சொல்லு”
“மியாவ் மியாவ்”
குட்டிப் பாப்பா சொன்னாள், “பூனை, நிலா சொல்லு”
“மியாவ் மியாவ்”
குட்டிப்பாப்பா சொன்னாள், “பூனை, டாட்டா சொல்லு”
“மியாவ் மியாவ்”
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குட்டிப்பாப்பாவின் புத்திசாலி அம்மா, “பூனைக்கு எது சொல்லத் தெரியுமோ அதையே சொல்லிக்கொடேன், அப்போ பூனை சொல்லுதா பார்ப்போம்” என்றார்.
குட்டிப்பாப்பாவும் “பூனை, மியாவ் மியாவ் சொல்லு” என்றாள்.
இப்போது பூனை, “மியாவ் மியாவ்” என்றது.
குட்டிப்பாப்பா, பூனையைப் பார்த்துச் சொன்னாள்,”வெரிகுட் பூனைக்குட்டி, ஒருவழியா நீ பேசக் கத்துக்கிட்டே!”
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.