ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்.....
" இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கைகளால் என்ன பயன் " என்றார்..
ஒரு மாணவன் "எதையும் எடுத்துச் சாப்பிடலாம்" என்றான்..
மற்றவனோ “யாரையும் இந்தக் கையால் அடிக்கலாம்” என்றான்..
மூன்றாமவன், "நம்மை ஒருவர் அடிக்க வந்தால் அதைத் தடுக்கலாம்" என்றான்..
நான்காவது மாணவன், "நம்மைப் படைத்த இறைவனை இந்தக் கை கொண்டு வணங்கலாம்" என்றான்..
ஐந்தாவதாக ஒரு மாணவன் எழுந்து, "இந்தக் கைகள் இருப்பதன் பலன் பிறருக்கு உதவுவதற்கே.. பிறருக்கு உதவுவதால், உதவி பெற்றவர்களும் மகிழ்வார்கள்... நம்மிடம் இருப்பதை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வதற்கே இறைவன் கைகளைப் படைத்திருக்கிறான்" என்றான்..
அந்த மாணவனின் பதிலைக் கேட்ட ஆசிரியர் அவனைப் பாராட்டினார்.