விவசாயி ஒருவருக்கு மலை அருகேத் தோட்டமிருந்தது. அதில் துளசி பயிர் செய்து இருந்தார். துளசிச் செடிகளுக்கு இடையே முளைக்கும் களைகள், முட்செடிகள் ஆகியவற்றைப் பிடுங்கி எடுத்துத் துளசி செடிகைளக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வளர்த்து வந்தார்.
ஒரு நாள் துளசி செடிக்கு இடையே வளர்ந்து இருந்த ஒரு முட்செடி செடி ஒன்றைப் பிடுங்கி எறிந்தார். உடனே அந்த முட்செடி கண்ணீர் விட்டு அழுதபடி விவசாயியிடம், ''நான் யாருக்குமே பயன்படப் போவதில்லை... எந்தத் திறமையும் இல்லாத என்னைக் கடவுள் ஏன் படைத்தார் என்று தெரியவில்லை'' என்று சொல்லி வருத்தப்பட்டது.
அதைக் கேட்ட விவசாயி, ''கடவுள் யாரையும் காரணமில்லாமல் படைப்பதில்லை. எலோருக்கும் திறமையும், பலத்தையும் கொடுத்து இருக்கிறார். அதை நாம் தான் கண்டுபிடித்துப் பயன்படுத்த வேண்டும்'' என்று விவசாயி சொன்னார்.
உடனே அந்த முட்செடி, ''என்னிடம் என்ன திறமை இருக்க போகிறது? நானோ முட்செடி பிறரைக் காயபடுத்தும் நான் யாருக்கும் உதவியாக இருக்கப் போகிறேன்'' என்று தன்னையே குறைத்துப் பேசியது.
விவசாயி ஒன்றும் பதில் பேசாமல் சென்று விட்டார்.
மறுநாள் விவசாயி தன் தோட்டத்திலிருந்தது பிடுங்கி எறிந்த முட்செடிகளை எல்லாம் ஒன்று சேர்த்து தோட்டைத்தைச் சுற்றி வேலி அமைத்தார்.
பின்பு அந்த முட்செடியிட்ம் சென்று, ''நீ முட்செடி தான் பிறறைக் காயப்படுத்துபவன் தான். ஆனால், உன்னிடமும் திறமை இருக்கிறது, பலமும் இருக்கிறது. அதனால்தான் இன்று இந்தத் தோட்டத்தையே பாதுகாக்கும் காவல்காரனாக, வேலியாக உயர்ந்து விட்டாய்'' என்று விவசாயி சொல்ல...
”கடவுள் படைத்த எல்லா உயிர்களுக்குமே திறமையும் பலமும் உண்டு என்பதை உணர்ந்து கொண்டேன்” என்றது அந்த முட்செடி.