மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து, “மழை வருமா?” என்று கேட்டான்.
“வராது” என்றான் அமைச்சன்.
வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த ஒரு விவசாயி சிறிது நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.
அதைப் பொருட்படுத்தாமல் போன மன்னன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது கடும் மழை வந்தது. அவன் நன்றாக நனைந்துபோய் விட்டான்.
திரும்பும் வழியில் அவன் அந்த விவசாயியைச் சந்தித்து, “மழைவரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான்.
அவனோ, “மன்னா எனக்குத் தெரியாது. ஆனால் என் கழுதைக்குத் தெரியும். அது மழை வரும் முன் தனது காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்” என்றான்.
உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டுக் கழுதையை அமைச்சராக்கினான்.
இக்கதையைச் சொன்ன ஆபிரஹாம் லிங்கன், “அதில் தான் மன்னன் ஒரு மிகப்பெரிய தவறு செய்து விட்டான், என்னவெனில் அன்று முதல் எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும்” என்று அலைந்து கொண்டிருக்கின்றன.