மன்னர் இஷாக்கின் அழகான மகளை மணக்க விரும்பினான். மன்னர் இஷாக் திறமையான வில்வித்தைக்காரர். தனது மகளை தலைச்சிறந்த வில்வித்தைக்காரனுக்கே மணமுடித்துத் தரப்போவதாக அறிவித்தார்.
அந்த அறிவிப்பைக் கேட்டதும் வாஜன் எனும் வேட்டைக்காரனுக்கு மன்னர் மகளை மணமுடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. அவனுக்கு வில்வித்தையைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், அவன் ஒரு திட்டம் தீட்டினான். காட்டிற்குள் சென்று பல பறவைகளைப் பிடித்த வாஜன், அவற்றின் வலது கண்ணை மட்டும் தோண்டி எடுத்தான். பிறகு அரண்மனைக் கதவுகள் அருகே நின்று அவற்றை விற்கத் தொடங்கினான். அவனைச் சுற்றி கூட்டம் கூடியது.
அப்போது, அந்தப் பக்கமாக வந்த அரசர் கூட்டத்தைப் பார்த்து, என்ன ஏதென்று விசாரித்து வரும்படி தன்னுடைய படை வீரன் ஒருவனை அங்கு அனுப்பினார்.
அந்தப் படை வீரன் அங்கு சென்று, வாஜன் என்பவன் ஒரே ஒரு கண் மட்டுமுள்ள பறவைகளை விற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தான்.
உடனே அரசர் படை வீரனை அனுப்பு வாஜனைத் தன்னிடம் அழைத்து வரும்படி சொன்னார். வாஜனும் வந்து சேர்ந்தான்.
அரசர் அவனிடம், “உன்னிடம் இருக்கும் பறவைகளுக்கு ஒரே ஒரு கண் மட்டும் இருக்கிறது, அதுவும் இடது கண் மட்டுமே இருக்கிறது. இது எப்படி?” என்று கேட்டார்.
அதைக் கேட்ட வாஜன், “அரசே, நான் எப்போதும் பறவைகளை வலது கண்ணில் மட்டுமே அம்பெய்து கொல்வேன். அதனால்தான்” என்று பதிலளித்தான்.
வியந்துபோன அரசர், வாஜனுக்கே தன் மகளை மணமுடித்துக் கொடுப்பதென்று முடிவு செய்தார். அவர் அவனிடம், தனது மகளை மணமுடித்துக் கொடுப்பதாகச் சொன்னார்.
உடனே வாஜன், தான் ஏழை என்றும், தனக்கு ராஜாவின் மகளை வைத்துக் காப்பாற்ற வசதியில்லை என்றும் கூறினான்.
அவனது நேர்மையைப் பாராட்டிய அரசர், வாஜன் தன் அரண்மனையிலேயே வசிக்கலாமென்று கூறி அவனைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
இளவரசிக்கும் வாஜனைப் பிடித்துப்போனது. சில வாரங்கள் கழித்து இருவருக்கும் திருமணம் நடந்தது. பெரிய வில்வித்தைக்காரன் தனக்கு மருமகனாகக் கிடைத்திருக்கிறான் என்ற பெருமையோடு, வாஜனைத் திருமண விழாவில் திரண்டிருந்த மக்கள் முன் அவன் திறமையை நிரூபித்துக் காட்டச் சொன்னார் அரசர். அரசரும் தன் வில் அம்புகளை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
வாஜன் பயத்தில் நடுங்கினான். வில், அம்புகளை எப்படிப் பிடிப்பது என்றுகூட அவனுக்குத் தெரியாது. வில்லையும் அம்பையும் கையில் பிடித்துக்கொண்டு வெகுநேரம் சும்மா நின்றான். விருந்தினர்கள் பொறுமையிழந்தனர். சிலர் வாஜனை ஏமாற்றுக்காரன் என்று சந்தேகிக்கத் தொடங்கினர். பொறுமையிழந்த விருந்தினர் ஒருவர், சீக்கிரம் அம்பெய்யச் சொல்லி வாஜன் முதுகில் தட்டினார். அப்போது அது வாஜனின் கைகள் அசைந்தது, அப்போது அந்த வில்லில் இருந்து அம்பு புறப்பட்டு காற்றில் பறந்தது. சரியாக அந்த நேரத்தில் ஒரு கொக்கு பறந்து வந்தது. அம்பு அதனைக் குத்தக் கொக்கு கீழே விழுந்து இறந்தது.
அரசர் விரைந்து சென்று இறந்த பறவையைத் தூக்கினார். வாஜனின் அம்பு கொக்கின் மெல்லிய கழுத்தில் குத்தி இருப்பதாகவும் அதன் மூலமே வாஜனின் திறமை தெரிகிறது என்றும் பாராட்டினார். அதனை அனைவரும் ஏற்று வாஜனைப் பாராட்டினார்கள். ஆனால் வாஜனோ கோபமாக இருப்பதுபோல் நடித்தான்.
பின்னர் அவன், “அரசே! நான் எப்போதும் பறவைகளின் வலது கண்ணில் மட்டுமே அம்பெய்து கொல்வேன். ஆனால், இங்கு வந்த விருந்தினர் என் கையைத் தட்டியதால் குறி தவறிப் பறவையின் கழுத்தில் பட்டது. என் கொள்கையே பாழாகிப் போய்விட்டது. இனி நான் வில்லையே தொட மாட்டேன் என்று சபதம் செய்தான். அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
சில நாட்களில் வாஜன் அரசனானான். வெகு காலத்துக்கு அவனை, மிகச் சிறந்த வில்வித்தைக்காரன் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.