ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான்.
ஒரு சமயம் பணக்கார நண்பனுக்குக் கொஞ்சம் பணக்கஷ்டம் வந்தது.
அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் நண்பனை பார்த்து, “எப்படிடா இருக்கே?” என்று வழக்கம் போலக் கேட்டான்.
“டேய் நீ கொஞ்சம் சும்மா இருடா, எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. அதை உன்னால் கொடுக்க முடியுமா?” என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்று விட்டான்.
அவன் பின்னால் சென்ற அந்த ஏழை நண்பன் அவனிடம், “அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?” என்று மெதுவாகக் கேட்டான்.
பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி. ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான்.
அங்கிருந்து சென்ற ஏழை நண்பர்ன் அரைமணி நேரத்தில் பணத்துடன் திரும்பி வந்தான்.
பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
பணத்தை கொடுத்த ஏழை நண்பன், “நண்பனே, நீ எப்போது பார்த்தாலும் அதிகமான பணத்தைச் சேர்க்க வேண்டுமென்றே அலைந்தாய். அதனால், நீ புதியதாக நல்ல நண்பர்களைச் சேர்க்க மறந்து விட்டாய். நான் அவைகளை சம்பாதித்து வைத்திருந்தேன். அதனால், அவர்களிடம் கேட்டு இந்தப் பணத்தை வாங்கு வந்தேன்” என்றான்.
பணக்கார நண்பனுக்குப் புரிந்தது.
இந்த உலகத்தில் இன்றும் பலர் பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். உண்மையான நண்பர்களைச் சேர்க்கத் தவறித் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.