எது தன்னம்பிக்கை?
தன்னம்பிக்கை வளர்க்கும் வகுப்பில் மூவர் கலந்து கொள்கின்றனர்.
அவர்கள் மூவரிடம் ஒரே கேள்வி கேட்கப்படுகிறது.
“சவப்பெட்டியில் நீங்கள் கிடத்தப்பட்டு இருக்கிறீர்கள். குடும்பத்தார் வருத்தத்துடன் சூழ இருக்கும் போது, உங்களைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்?”
முதலாம் மனிதர்: இதோ, இங்கே கிடப்பவன் உலகின் சிறந்த மருத்துவன் மட்டுமில்லை, நல்ல குடும்பத்தவனும் கூட
இரண்டாம் மனிதர்: இவர் பலரது வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்
மூன்றாமவர்: அதோ பாருங்கள், அவன் அசைகிறான்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.