ஒரு முதலாளி தனது இரண்டு ஊழியர்களுடன் அருகிலுள்ள ஒரு இடத்திற்குச் சுற்றுலா சென்றார்.
அங்கு, அவர்கள் எதிர்பார்க்காதபடி அவர்களின் எதிரில் ஒரு தேவதை தோன்றினாள்.
அந்தத் தேவதை, ''உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு வரம் தருகிறேன். கேளுங்கள்!'' என்றது.
தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியாகிப் போனது.
உடனே முதல் ஊழியர், “தேவதையே, நான் உடனே சுவிட்சர்லாந்தில் இருக்க வேண்டும்” என்று முந்திக் கொண்டு கேட்டார்.
உடனே தேவதை, “அப்படியே ஆகட்டும்” என்றது.
அடுத்த நிமிடம், அவர் சுவிட்சர்லாந்தில் இருந்தார்.
அதைக் கண்ட அடுத்த ஊழியர், “எனக்கு, லண்டன் நகரில் அழகிய பெண்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று கேட்டார்.
அவர் கேட்ட வரத்தையும் அந்தத் தேவதை கொடுத்தது.
பின்னர் அந்தத் தேவதை, அங்கு பொறுமையாக நின்றிருந்த முதலாளியைப் பார்த்து, “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!” என்றது.
உடனே அந்த முதலாளி, “தங்களிடம் வரம் பெற்றுச் சென்ற என் ஊழியர்கள் இருவரும் இப்போதே இங்கே திரும்பி வந்து சேர வேண்டும்” என்றார்.
அந்த ஊழியர்கள் இருவரும் அடுத்த நிமிடம் அங்கிருந்தார்கள்.
இருவரும், தாங்கள் எப்படி மீண்டும் திரும்பி வந்தோம் என்பதைத் தெரிந்து அதிர்ந்து போனார்கள்.