அப்படியே நம்பலாமா?
ஷேக்சாதி எனும் ஞானி, சிறு பையனாக இருந்த பொது தனது தந்தையுடன் மெக்காவுக்குச் சென்று கொண்டிருந்தார். இவர்கள் சென்ற யாத்திரிகர்கள் கூட்டத்தினர் தினமும் நடுநிசியில் எழுந்து பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஒருநாள் ஷேக்சாதியும், அவருடைய தந்தையும் நடுநிசியில் எழுந்து பிரார்த்தனை செய்யத் துவங்கினார்கள். மற்றவர்கள் எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இதைக் கவனித்த ஷேக்சாதி, "அப்பா, இவர்கள் எத்தனை சோம்பேறியாக இருக்கிறார்கள். பாருங்கள். பிரார்த்தனைக்காக எழுந்திருக்காமல் இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறார்களே" என்றார்.
அதற்கு அவரது தந்தை, "நீ இப்படி அவர்களைப் பழிப்பதற்கு நீயும் எழுந்திருக்காமல் துங்கியிருக்கலாம்." என்றார்.
ஷேக்சாதி தன் தவறை உணர்ந்து அதற்காகத் தன் தந்தையிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.