புதிதாகத் திருமணமான ஒரு கணவனும், மனைவியும் புதிய நகரம் ஒன்றுக்குக் குடியேறினார்கள்.
அடுத்த நாள் காலையில் இருவரும் முன்னறையில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்துக் காயப் போட்டுக் கொண்டிருப்பது சன்னல் வழியாகத் தெரிந்தது. அதைப் பார்த்த மனைவி, கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்தப் பொண்ணுக்குத் துவைக்கவேத் தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா.
சன்னல் வழியாகப் பார்த்த கணவன் ஒன்றும் சொல்லவில்லை.
பக்கத்துக்கு வீட்டுப் பொண்ணு துவைச்சுக் காய போடறதும், அதைச் சன்னல் வழியாகப் பார்த்து மனைவி துவைக்கத் தெரியலைன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு.
திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமாகச் சொன்னாள், “இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு, துணி துவைக்கத் தெரிஞ்சுக்கிட்டாள். இன்னைக்குச் சுத்தமாத் துணிகளைத் துவைச்சிருக்கா”
அதுக்கு அந்தக் கணவன், “அது வேற ஒன்னும் இல்ல. இன்னைக்குக் காலையில சீக்கிரமா எழுந்து, நம்ம வீடு சன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டுக் காபி குடிக்க ஆரம்பிச்சான்.