ஒரு மொட்டைத் தலையனைக் கொசு கடித்துவிட்டது.
கோபத்தில் அதைக் கொன்றுவிடும் எண்ணத்துடன் தலையில் பளேர் என்று அடித்துக் கொண்டான் அவன்.
கொசு சுலபமாகப் பறந்து சென்று சற்று தூரத்திலிருந்து சின்னதாகச் சிரித்தது. பின்னர் அந்தக்கொசு;
“ஒரு சிறிய கொசுக்கடியை உன்னால் தாங்க முடியவில்லையே! இதற்காக உன்னையே வருத்திக் கொள்கிறாயே, தலை வலிக்கிறதா” என்றது.
அதற்கு அவன் “ என்னை நானே அடித்துக் கொண்டாலும், அதற்காக என்னை நானே மன்னிக்கவும் முடியும். ஆனால் என் ரத்தத்தை ஓசியாகக் குடிக்கும் உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன். என்னிடம் மாட்டமலாப் போய்விடுவாய் ” என்றான்.
பழி வாங்கும் நடவடிக்கையால் இருபக்கமும் பாதிப்புதான்.