முட்செடியின் குணம்
ஒரு நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமாக முள்செடியில் மாட்டிக் கொண்டுவிட்டது. தப்பிக்க முயல்கையில் உடம்பெல்லாம் காயம், கீறல் ஏற்பட்டது.
உடனே அந்த நரி முள்செடியைப் பார்த்து, “முள்செடியே, என் உடம்பெல்லாம் இப்படி உன் முட்களால் கீறிவிட்டாயே... நீயெல்லாம் ஒரு நண்பனா ?” என்று திட்டியது.
அதற்கு முள்செடி, “ நண்பா! நான் முள்செடி என்பதும், என்னுடைய குணம் என்னைத் தீண்டுபவர்களைக் குத்துவது என்பதும் உனக்குத் தெரியும். எனக்குக் கடவுளால் பிறரைக் குத்துவதைத் தவிர வேறு எதுவும் கொடுக்கப்படவில்லை, என்னை நீ குறை சொல்வதில் எந்தப் பயனும் இல்லை” என்றது.
நரி ஒன்றும் பேசாமல் சென்றது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.