அரிஸ்டாட்டிலிடம் பலர் மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அலெக்சாண்டரும் அவரிடம் பயின்று கொண்டிருந்தார்.
அரிஸ்ட்டாட்டில் “நீங்கள் மன்னராக இருக்கும் பட்சத்தில், உங்கள் நாட்டில் குழப்பம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.
முதலில் ஒரு மாணவன் சொன்னான்.
“உடனே அமைச்சரவையைக் கூட்டி, அவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பேன்”
“என் முன்னோர்களின் வழிமுறையை அறிந்து நடப்பேன்” என்றான் அடுத்தவன்.
அடுத்து அலெக்சாண்டர், “சூழ்நிலைக்கு ஏற்ப நானே முடிவெடுப்பேன்” என்று சொன்னான்.
அதைக் கேட்ட அரிஸ்ட்டாட்டில், “நீ சொல்வதுதான் சரி” என்றார்.
இப்படிச் சுயமாக முடிவெடுக்கும் திறன்தான் அலெக்சாண்டர் பெரும் வெற்றியைக் குவிக்கக் காரணமாய் அமைந்தது என்பதை இங்கு சொல்லவும் வேண்டுமா?