ஒரு நாள் சித்திரகுப்தன் வருத்தமாகப் பிரம்மனிடம் சொன்னார், பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும் கணவனே, ஏழு ஜென்மத்துக்கும் கணவனாக அவர்களுக்குக் கிடைப்பான், ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
என்ன சிக்கல்...? பிரம்மா வினவினார்.
பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள், ஆனால், ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் என்கிறார்கள், அதுதான் சிக்கல்.
இருவரையும் திருப்தி செய்ய, என்ன செய்ய வேண்டும்...?
இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார், பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார், அவர் பெயர் சாணக்கியர், அவரைப் பாருங்கள், இதற்குத் தீர்வு கிடைக்கும் என்றார்.
சித்திரகுப்தர், சாணக்கியரைச் சென்று பார்த்தார். சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார், ஒன்றும் சரிவரவில்லை.
கடைசியாக, அந்தக் கணவன்களிடமே கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து, அவர்களிடம் பேசினார்கள். கணவன்மார்களில் ஒருவர், ஒரு யோசனை சொன்னார். அதைக்கேட்டு சாணக்கியர் அவரைக் கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிவிட்டு இதை விடச் சிறந்த தீர்வு வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறிவிட்டு இதை அந்தப் பெண்களிடமே கேட்டு விடுங்கள் என்று சொன்னார்.
இந்தத் தீர்வை, சித்திரகுப்தன் அந்தப் பெண்களிடம் கூறினார். அதற்கு அந்தப் பெண்கள் சித்திரகுப்தனைக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
அப்படி என்னதான் தீர்வு..."
அது "...?”
சித்திரகுப்தன் அந்தப் பெண்களிடம், பிரம்மா நீங்கள் கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டார், ஆனால் ஒரு நிபந்தனை, ஏழு ஜென்மத்திற்கும் அதே மாமியார்தான் இருப்பார், அதற்கு உங்களுக்குச் சம்மதமா என்றார்.