சன்னியாசி எப்படி இருக்க வேண்டும்?
ஒரு வியாபாரியும், சன்னியாசியும் பசிக் களைப்புடன் ஒரு சத்திரத்தை வந்தடைந்தனர். சத்திரத்தில் ஒருவருக்குத்தான் மிச்சமிருந்தது.
வியாபாரி சன்னியாசியைப் பார்த்து, "இன்று ஏகாதசியாயிற்றே, தாங்கள் பட்டினியாயிருக்க வேண்டாமா?" என்று கேட்டான்.
சன்னியாசியும் வேறு வழியின்றி, "ஆமாம்" என்று தலையாட்டவே, வியாபாரி அந்த சாப்பாட்டைத் தின்று தீர்த்தான்.
பிறகு இருவரும் சேர்ந்து செல்கையில் வழியில் ஒரு நதி குறுக்கிட்டது.
தன்னைத் தூக்கிச் செல்லும்படி வியாபாரி சன்னியாசியிடம் வேண்டினார்.
அவரும் அப்படியே தூக்கிச் சென்றார்.
பாதி நதி கடந்ததும், சன்னியாசி வியாபாரியைப் பார்த்து, "உன் மடியில் பணம் இருக்கிறதா?" என்று கேட்டார்.
வியாபாரியும், "இருக்கிறது" என்றான்.
"அப்படியா? சன்னியாசியாகிய நான் பணத்தைச் சுமக்கக் கூடாதே!" என்று அவனைத் "தொப்"பென்று தண்ணீரில் போட்டார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.