பெரியதாக இருப்பது ஆபத்தா?
குளம் ஒன்றில் சிறிய மீன் ஒன்று இரை தேடி அலைந்து கொண்டிருந்தது.
பெரிய புழு ஒன்று நெளிந்து கொண்டிருப்பதை அது பார்த்தது. அதன் அருகே சென்றது.
"இந்தப்புழு என்னை விட அளவில் பெரியதாக உள்ளது. என்னால் இதை விழுங்க முடியாது. உணவு கிடைத்தும் நம்மால் உண்ண முடியவில்லையே" என்று வேறு உணவைத் தேட நினைத்தது.
அப்பொழுது பெரிய மீன் ஒன்று அங்கு வந்தது. அந்தப் புழுவை விழுங்கியது.
தூண்டிலில் வைக்கப்பட்டிருந்த புழு அது. தூண்டில் முள் அந்தப் பெரிய மீனின் வாயில் நன்றாகக் குத்தியது. வேதனை தாங்க முடியாமல் துடித்தது அது.
மீன் சிக்கியதை அறிந்த தூண்டில்காரன் அதை மேலே இழுத்து மீன் கூடைக்குள் போட்டான்.
நடந்ததையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறிய மீன், "சிறியதாக இருப்பதும் நல்லதுதான். ஆபத்து அதிகமில்லை" என்றபடி அங்கிருந்து சென்றது.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.